108: (Baseness - கயமை)
[This is the last chapter of “portuT pAl” –(Wealth), a major
section. vaLLuvar concludes this with the chapter on baseness. A lot has been
discussed about the virtues to have and traits to be devoid of thus far. This
chapter is particularly focusing on the baseness in the people and what defines
that in people.]
1st
April,2015
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
(குறள் 1071:
கயமை அதிகாரம்)
மக்களே போல்வர் - புறத்தோற்றத்தில் மக்களென்பாரைப் போன்றோரே
கயவர் - கீழ் குணமுடையவர்கள்
அவரன்ன - அவ்விரண்டு பிரிவுகளுக்கும் இடையே உள்ள
ஒப்பாரி - உருவத்தால் மட்டுமாகிய ஒப்புமை
யாம் கண்டதில் - நாம் வேறு கண்டதில்லை,
கயவர் என்போரை வரையறுக்கச் சொல்லி வள்ளுவரை யாராவது கேட்டிருக்கக்கூடும்.
அவர்களுக்கு பதிலிருப்பது போன்ற குறள் இது. கீழ்க்குணம் கொண்டோருக்கும் மற்ற மக்களுக்கும்
பெரிய புற வேற்றுமை ஒன்றுமில்லை என்பதே நாமெல்லாம் காணுவது. இரண்டு பிரிவினரும் உருவத்தால்
மனித இனத்தரைப் போன்றோரே! மற்று, கீழ்க்குணத்தோரை மக்களோடு ஒப்பு வைக்கவியலாது என்பதே
இக்குறள் உணர்த்தும் கருத்து! வள்ளுவரின் நையாண்டி
உச்சத்திலுள்ள குறள் இது என்றும் கொள்ளலாம்.
அவர்களை விலங்குகளோடும் ஒப்பமுடியாது. விலங்குகளுள்ளும்,
நற்குணம் கொண்டவையும், மனிதரிடையேயும் காணவியலாத சில அபூர்வ ஒழுக்கவியல் கூறுபாடுகள்
உள்ளன.
Transliteration:
makkaLE
pOlvar kayavar avaranna
oppAri
yAngkaNDa dil
makkaLE
pOlvar - In
external look they look like normal people
kayavar –
the people of base, squalid nature
avaranna –
Among these two categories
oppAri –
striking similarity in looks alone
yAm
kaNDadil – We have not seen anywhere else.
vaLLuvars’ sarcasm is at its best. He has written
this verse as if someone has asked him to define the people of base nature. His
answer is that there is not much external difference between to find between
those two classes. They both look like human being only - implying base people
cannot be placed with humans.
People of base nature cannot be placed among animals
either, as among animals there are many that have good traits that are not even
seen in humans as studies on animals indicate.
“Humans
look similarly to base
No external difference in face”
இன்றெனது குறள்:
கயவர்கள் போன்றோரே அல்லார்
- புறத்தில்
கயவரும் அல்லாரும் ஒப்பு
kayavarkaL pOnROrE allAr puRattil
kayavarum allArum oppu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam