நேற்றோடு நிறைவு பெற்ற இணையத்தில் முகநூல் சந்த வசந்தக் குழுமக் கவியரங்கத்தில், அவைத்தலைவர் கவியேறு இலந்தை இராமசாமி அழைப்பில் இட்ட கவிதை..
இறை வணக்கம்:
எலிமேல் அமர்ந்தான் எதற்கும் முதலான்
புலித்தோல் அணிந்தார் மகனார்- ஒலியோம்
வடிவோன் தமிழோர் கடவுள் இளையோன்
வடிவேலன் மூத்தோன் துணை
தலைவர் வணக்கம்:
சிந்துமிசை சந்தமொடு வந்துகவி
தந்ததமிழ் சொந்தரேஇ லந்தையரே
இந்தஅவை தந்தமுறை நுந்தமக்கு
எந்தனுடை சிந்தைபணி வந்தனைகள்
அவை வணக்கம்:
சொன்மாரி பொழிகின்ற கவிஞரிங்கே
சொக்கவைக்கும் வித்தகமும் கற்பனையும்
பொன்மாரி போல்சொரிந்து யாத்திடுறார்
பொங்கிவரும் புதுப்புனலின் வேகத்தொடு
அத்தனவன் ஆதிபரன் பித்தனவன்
ஆக்கியநல் அமுதமொழி அழகுதமிழ்
வித்தகத்தில் சித்தமதை வைத்தகவி
வித்தைநிறை முத்தமிழீர் முதல்வணக்கம்
அடடாவோ! அடடா!
-அஷோக் சுப்ரமணியம்
விந்தைக்கும் கழிவிரக்க உணர்வுக்கும்
வித்தகத்தைப் பாராட்டிச் சொல்வதற்கும்
வெற்றிக்கும் தோல்விக்கும் வாழுதற்கும்
வீழுதற்கும் சொல்லடடா வோஅடடா
ஆதியென்றும் அந்தமென்றும் அலகிலாத
அகண்டபெரு விண்வெளியைப் பார்க்கையிலே
ஓதியுற்ற கல்வியெல்லாம் உதவாதே
ஒண்பொருளான் விளையாடல் புரியாதே
எத்தனையோ விந்தைகள் பூமியிலே
எண்ணிலாமல் ஏராளம் வானத்திலே
இத்தனையும் அடடாவோ அடடாவாய்
இங்கிருக்க ஏன்நாமோ காய்கவர்ந்தோம்?
சாதியென்ற சாக்கடையின் சகதியிலே
சண்டைகளால் வீழ்ந்தோமே அன்னையவள்
பாதியனும் அல்லாவும் ஏசுவுமே
பாரினிலே எந்தசாதி பகர்வீரோ?
வண்ணமய வாழ்க்கையிதை வாழ்ந்துபார்க்க
வையத்தீர் வகைவகையாய் வழிகளுண்டு
எண்ணந்தான் ஏற்படவும் உள்ளத்தில்
ஏற்றமுண்டு ஏற்பீரோ எம்மக்காள்?
அடடாவோ அடடாவென் றண்ணாந்து
ஆச்சரியக் குறிகொள்ளும் வாழ்விதுவாம்
மடமையிலே மண்ணாந்தை போலிராமல்
மாநிலத்தில் வாழ்ந்துத்தான் பார்ப்போமே!
எலிமேல் அமர்ந்தான் எதற்கும் முதலான்
புலித்தோல் அணிந்தார் மகனார்- ஒலியோம்
வடிவோன் தமிழோர் கடவுள் இளையோன்
வடிவேலன் மூத்தோன் துணை
தலைவர் வணக்கம்:
சிந்துமிசை சந்தமொடு வந்துகவி
தந்ததமிழ் சொந்தரேஇ லந்தையரே
இந்தஅவை தந்தமுறை நுந்தமக்கு
எந்தனுடை சிந்தைபணி வந்தனைகள்
அவை வணக்கம்:
சொன்மாரி பொழிகின்ற கவிஞரிங்கே
சொக்கவைக்கும் வித்தகமும் கற்பனையும்
பொன்மாரி போல்சொரிந்து யாத்திடுறார்
பொங்கிவரும் புதுப்புனலின் வேகத்தொடு
அத்தனவன் ஆதிபரன் பித்தனவன்
ஆக்கியநல் அமுதமொழி அழகுதமிழ்
வித்தகத்தில் சித்தமதை வைத்தகவி
வித்தைநிறை முத்தமிழீர் முதல்வணக்கம்
அடடாவோ! அடடா!
-அஷோக் சுப்ரமணியம்
விந்தைக்கும் கழிவிரக்க உணர்வுக்கும்
வித்தகத்தைப் பாராட்டிச் சொல்வதற்கும்
வெற்றிக்கும் தோல்விக்கும் வாழுதற்கும்
வீழுதற்கும் சொல்லடடா வோஅடடா
ஆதியென்றும் அந்தமென்றும் அலகிலாத
அகண்டபெரு விண்வெளியைப் பார்க்கையிலே
ஓதியுற்ற கல்வியெல்லாம் உதவாதே
ஒண்பொருளான் விளையாடல் புரியாதே
எத்தனையோ விந்தைகள் பூமியிலே
எண்ணிலாமல் ஏராளம் வானத்திலே
இத்தனையும் அடடாவோ அடடாவாய்
இங்கிருக்க ஏன்நாமோ காய்கவர்ந்தோம்?
சாதியென்ற சாக்கடையின் சகதியிலே
சண்டைகளால் வீழ்ந்தோமே அன்னையவள்
பாதியனும் அல்லாவும் ஏசுவுமே
பாரினிலே எந்தசாதி பகர்வீரோ?
வண்ணமய வாழ்க்கையிதை வாழ்ந்துபார்க்க
வையத்தீர் வகைவகையாய் வழிகளுண்டு
எண்ணந்தான் ஏற்படவும் உள்ளத்தில்
ஏற்றமுண்டு ஏற்பீரோ எம்மக்காள்?
அடடாவோ அடடாவென் றண்ணாந்து
ஆச்சரியக் குறிகொள்ளும் வாழ்விதுவாம்
மடமையிலே மண்ணாந்தை போலிராமல்
மாநிலத்தில் வாழ்ந்துத்தான் பார்ப்போமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam