மார்ச் 07, 2015

குறளின் குரல் - 1053

8th March, 2015

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
                    (குறள் 1047: நல்குரவு அதிகாரம்)

அறஞ்சாரா - வறுமை வந்துழியும் அது அறச்செயல்கள் அல்லாத மற்றவற்றால் வரின்
நல்குரவு - அவ்வாறு வரும் வறுமை
ஈன்ற தாயானும் - பெற்ற தாயாலும்
பிறன்போல - சொந்தமல்லாது மற்றவரைப் பார்ப்பதுபோல்
நோக்கப் படும் - பார்க்கப்படுவார் (சொந்தமற்றவர் போல)

ஏழ்மையென்பது ஏற்கனவே துன்பமானது. ஊழ்வினைப் பயனாலோ, அல்லது இப்பிறப்பின் அறிந்தோ, அறியாமலோ அறம் வழுவுவதால் அடைவது.  அறச்செயல்கள் செய்தாலும் ஊழ் வினைப் பயனாக எய்தும் ஏழ்மைக்கு ஒன்றும் செய்யவியலாது. ஆனால் இப்பிறப்பிலேயே அறமற்ற செயல்களைச் செய்வதால் ஒருவர் ஏழ்மையுற்றால், அவரைப் பெற்றதாயும், அவரைச் சொந்தமாகக் கருதாது மாற்றாரைப் போன்றே கருதுவாள். “இலார்க்கில்லைத் தமர்” என்றும் “வாழார்க்கில்லைத் தமர்” என்று பொதுவாக நாலடியார் பாடல்கள் சொல்வதும் இக்கருத்தையொட்டியேதான். தம்முடையவர் என்று சொல்வதற்கு ஒருவரும் இல்லையென்றால், தாயும் கூட அவரை ஒதுக்கிவிட்டதாகவே பொருள்.

பரிமேலழகர், அறஞ்சாரா என்பதற்கு காரண காரியங்களோடு ஒன்றானும் இயையாமை என்பார். அதாவது இன்ன காரணத்தினால் இதைச் செய்தேன் என்று தம் செயல்களுக்கான அறம் சார்ந்து கூறவியலாமையே அஃதாம்.

Transliteration:

aRanchArA nalguravu InRatA yAnum
piRanpOla nOkkap paDum

aRanchArA – by leading a non-virtuous life
nalguravu - If the poverty is attained
InRatA yAnum – even by a persons’ own mother
piRanpOla – as if not anyway related
nOkkap paDum – will be seen, treated.

As such poverty is painful and miserable. If attained either by fate of previous births, or how life is led in the present with either fully congnizant, by deed unknown to self as non-virtuous, there is nothing much a person can do. But knowingly committing to non-virtuous deeds and becoming poor, a person will not looked at by even his own mother as somebody related; will be treated as a non-entity as well somebody completely not connected.

How would one know if something is non-virtuous? If there is no justifiable cause and effect under the tenets of what the wisemen have drafted to be virtuous, then it is clearly non-virtuous.

“A person is ignored, even by his mother and not seen as own,
 If his poverty is by his own non-virtuous deeds as seeds sown”


இன்றெனது குறள்:

மற்றவன்போல் பார்ப்பாள் அறமில் வறுமையைப்
பெற்றானைப் பெற்றாலும் தாய்

maRRvanpOl pArppAL aRamil vaRumaiyaip
peRRAnaip peRRalum thAi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...