மார்ச் 06, 2015

குறளின் குரல் - 1052

7th March, 2015

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
                    (குறள் 1046: நல்குரவு அதிகாரம்)

நற்பொருள் - சொல்லும் பொருள் நல்லதாகவே இருப்பினும்
நன்குணர்ந்து சொல்லினும் - அதைத் தெளிவாக அறிந்து சொன்னாலும்
நல்கூர்ந்தார் - வறுமையில் உழல்பவர்
சொற்பொருள் - சொல்கின்ற பொருளானால்
சோர்வு படும் - அக் கருத்து மதிக்கப்படாமல் போகும்

“ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்ற சொலவடையைக் கூறுவதே இக்குறள்.  சொல்லும் பொருள் நல்லதாகவே இருப்பினும், அதை ஒருவர் தெளிவாக அறிந்து சொன்னாலும், அவர் வறுமையில் உழல்பவரானால், அவர் சொல்லக்கூடிய கருத்து மதிக்கப்படாது, என்பதே இக்குறளின் கருத்து.

இதையே ஒரு நாலடியார் பாடல் இவ்வாறு கூறுகிறது. “உயர் இனத்து ஆவின் கன்றாயின் இளங்கன்றும் மிக்க விலைபெறும், ஆதலின் படியாதவரேயாயினும் செல்வரது வாய்ச்சொல் மதிக்கப்படும். வறிஞரது வாய்மொழி, அவர் கற்றவரே யாயினும், சிறிது ஈரமுள்ள காலத்தில் உழுகின்ற உழவுபோல மேலளவாய்ச் சென்று உள்ளே மதிக்கப்படாதொழியும்”. அப்பாடலானது:

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

ஒரு இன்னா நாற்பது பாடல்வரியும் இக்குறள் கருத்தை அடியொட்டியதே.இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா”

Transliteration:
naRpoRul nanguNArndu sollinum nalkUrndAr
soRpoRul sOrvu paDum

naRpoRul – words of wisdom
nanguNArndu sollinum – though thoughtfully spoken
nalkUrndAr – that who dwell in poverty
soRpoRul – coming from them
sOrvu paDum – are not taken seriously or even ignored.

There is popular adage in Tamil which says, “poor mans’ words are never accepted in an assembly”. Same thought is expressed in this verse! Though words of wisdom, that too thoughtfully spoken, coming from a man of abject poverty, they have no value and not even considered.

A nAlaDiyAr poem says it with examples to emphasize the point. Though only a calf, a high breed will fetch more price; but the words of poor erudite are like ploughing in a land with only a little bit of wetness. Will be looked at only superficially, not deeply. A line from “innA nARpadu” says as plainly as “ even thoughtful words from a poor man are miserable”.

Though words of wisdom, that too thoughfully spoken
Coming from a poor man, ‘re never considered golden”


இன்றெனது குறள்:

ஏழைச்சொல் அம்பலம் ஏறாதே நல்லவை
கூழையற் றுணர்ந்துசொல்லி னும்

Ezhachsol ambalam ERAdE nallavai
kUzhayaR RuNarndusolli num

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...