மார்ச் 08, 2015

குறளின் குரல் - 1054

9th March, 2015

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
                    (குறள் 1048: நல்குரவு அதிகாரம்)

இன்றும் வருவது கொல்லோ - இன்றும் வந்து வருத்துமோ
நெருநலும் - நேற்றும்
கொன்றது போலும் - என்னைக் கொல்வதுபோல வருத்திய போன்ற
நிரப்பு - வறுமை?

இக்குறள் ஏழ்மையில் உழல்வோர் அன்றாடம் அஞ்சுவதைக் கூறும் குறள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்குக் கொல்வதுபோன்ற ஒரு வருத்தமே வறுமை. ஒவ்வொரு விடியலிலும், அவர்கள், நேற்று நம்மை வருத்திக்கொன்ற வறுமைபோன்றே இன்றும் வறுமை வருத்துமோ என்று அஞ்சிக்கொண்டேதான் விழிப்பர்.

ஒரு நாள் கொல்லப்படுவதே சொல்லொணாத் துன்பம் என்றிருக்கையில் ஒவ்வொரு நாளையும் கொல்லப்படுவோம் என்று எதிர் நோக்கி துவக்குவது எத்துணைக் கொடுமை? அத்தகையக் கொடுமை வறுமை என்று உணர்த்தி வறுமையின் கொடுமையைக் கூறுகிறார் வள்ளுவர்.

Transliteration:

inRum varuvadu kollO nerunalum
konRadu pOlum nirappu

inRum varuvadu kollO – Will it be painful today also?
Nerunalum – like yesterday
konRadu pOlum – how painful it was as if like being killed
nirappu – poverty?

This verse talks about how poor fear poverty everyday. Poverty is like being killed everyday. Poor wake up everyday fearing, if they have to once again spend the day in abject poverty

Even being killed once is a dreadful thought that is extremely painful. How miserable is it to expect it everyday routine? Such miserable pain is poverty, implies vaLLuvar in this verse.


“Fearing if the poverty will kill even today
 like yesterday, will worry poor, everyday”

இன்றெனது குறள்:

நேற்றேபோல் இன்றுமேழ்மைக் கொல்லுமோ என்றேழை
ஆற்றாமை கொள்வானென் றும்

nERREpOl inRumEzmaik kollumO enREzai
ARRAmai koLvAnen Rum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...