10th
March, 2015
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
(குறள் 1049:
நல்குரவு அதிகாரம்)
நெருப்பினுள் - நெருப்பினூடிருந்து
துஞ்சலும் ஆகும் - ஒருவர்க்கு தூங்கவியலும்
நிரப்பினுள் - ஆகனால் வறுமையெனும் கொடுந் தீயில்
யாதொன்றும் - நடுவில் சிக்கிய எவ்வொன்றும்
கண்பாடு - உறக்கமென்பது
அரிது - கடினம் (முடியாது என்பது உணர்த்தப்படும் பொருள்)
இக்குறள் மூலம் வறுமையென்பது வருத்துவதில் சுடும் நெருப்பினைக்
காட்டிலும் கொடுமையானது என்றும், வறுமையாட்பட்டோர்க்கு கவலையினால் தூக்கமில்லை என்பதும்
உணர்த்தப்படுகிறது.
நெருப்பின் நடுவிருந்து ஒருவரால் தூங்கவியலுமோ? யோக சாதனங்களினால்
கூடும். ஆனால் அத்தகைய யோக சாதனங்களும் ஒருவருக்கு கைகூடாமல் போகும், தீயினும் கொடிய
தீயவாம் வறுமையவரை வாட்டும்போது. உறக்கம் என்பதைத் துறக்க செய்யும் வறுமை.
Transliteration:
neruppinuL
thunjalum Agum nirappinuL
yAdonRum
kaNpADu aridu
neruppinuL –
sitting inside the fire
thunjalum
Agum – a person may be able to sleep
nirappinuL –
but caught in abject poverty
yAdonRum –
whatever be it
kaNpADu –
to have sleep
aridu –
is rare (impossible is what is meant here)
Through this verse, it is underlined that poverty is
worse than the fire that can burn and also tmake then sleepless.
Can a person sleep in the middle of fire? It is perhaps
possible with intense yoga practices. But even that may not be in a persons’
grasp and grip engulfed in poverty.
“Even
midst of fire, a person may be able to sleep;
with poverty, it is impossible to even glimpse
nap”
இன்றெனது
குறள்(கள்)
தீயினூடே
தூங்கினும் தூங்கார் வறுமையாம்
நோயில் அழிந்தொரு
வர்
thIyInUDE thUnginum thUngAr vaRumaiyAm
nOyil azhindoru var
உறக்கம் மறக்கும் துறக்கும் நெருப்பில்
உறங்குவோர்க் கும்வறுமை யால்
uRakkam maRakkum thuRakkum neRuppil
uRanguvOrkk kumvaRumai yAl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam