11th
March, 2015
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
(குறள் 1050: நல்குரவு அதிகாரம்)
துப்புரவில்லார் - ஏதுமில்லாமல் எல்லாவற்றையும் இழந்து இருக்கும்
வறியர்
துவரத் - முற்றிலும்
துறவாமை - எல்லாவாற்றையும் துறக்காமல் இருத்தல் (மானத்தை
மட்டும் துறந்து)
உப்பிற்கும் - மற்றவர் வீட்டு உப்பிற்கும்
காடிக்கும் - கஞ்சிக்கும்
கூற்று - எமன் போன்றதாம் என்று கூறுவது தவறு. (வேண்டி பஞ்சப்பாட்டு பாடுவது
என்பது பொருந்துகிறது)
வாழ்வாதாரங்கள் எல்லாவற்றையும் இழந்து வறியரானோர், தம்முடைய ஆசைகளைத் துறக்கவேண்டும்
என்கிறாரா வள்ளுவர் என்பது தெளிவாகாத குறள் இது. உரைகள் கூறும் கருத்து அதுவாகத்தான்
இருக்கிறது. பரிமேலழகர் ஒருபடி மேலே சென்று, பிறருடைய இல்லிலிருக்கும் உப்புக்கும்,
கஞ்சிக்கும், இத்தகையோர் எமனாக இருப்பர் என்கிறார்! எவ்வாறு என்பது தெளிவாக வில்லை.
ஆயினும் இக்குறளின் கருத்தை இவ்வாறு விரித்துச் சொல்வது பொருந்துமென
நினைக்கிறேன். எல்லாம் துறந்து வறியரானோர், மானத்துக்கு அஞ்சி, ஒடுங்குதலே வள்ளுவர்
அறிவுறுத்தும் நெறி. மற்ற ஆசைகளை முற்றிலும் துறக்காமல், மானத்தை மட்டும் துறந்தவர்கள்
பிறரைச் சார்ந்து தங்கள் உயிர் ஓம்புதலை விரும்புவர். அப்போது அவர்கள் மற்றவர்கள் வீட்டு
உப்புக்கும், கஞ்சிக்கும் பஞ்சப்பாட்டைப் பாடுவதும் இயற்கை. கூற்று என்பதற்குப் பஞ்சப்பாட்டு
என்ற பொருளும் உண்டே. அதை எமன் என்று சொல்வது சற்றும் பொருந்தவில்லையென்றே தோன்றுகிறது.
மற்ற உரையாசிரிகள் விளக்கமும், விளங்காததாகவே உள்ளது.
Transliteration:
Tuppura villAr
tuvarath tuRavAmai
uppiRkum kADikkum
kURRu
TuppuravillAr – Poor
people that have lost everything
tuvarath - totally
tuRavAmai – not
losing the desire for everything (leading to ascetic state)
uppiRkum – desiring others salt
kADikkum - porridge
kURRu – singing
the song of “not having” to evoke self serving sympathy
It is
not clear if vaLLuvar advocates those who have lost everything and are in
poverty, must also lose their desire to live. Most commentators interpret
similarly, perhaps based on Parimelazhagars’ commentary. They all say that such
people will be the Lord of death for others’ salt and porridge. It does not
make any sense.
Perhaps
we need to interpret it differently.
Those who have lost everything, must at least not lose their honor and
go towards the ascetic state. On the contrary, if they lose that, not losing
other desires, would shamelessly go and beg others for their salt and porridge.
The word “kURRu” means “singing the song of have-nots”, which only shameless
people do. Interpreting that as lord of death does not fit the context.
இன்றெனது
குறள் (கள்):
முற்றும்
துறவாத ஏழை எமனேயாம்
பற்றினாலுப்
புக்குகஞ் சிக்கு (மற்றவர்கள் உரைக்கு ஏற்றவாறு)
muRRum tuRavAda Ezai emanEyAm
paRRinAlup pukkukanj chikku
மானமற்று
மற்ற வறாவறியோர் ஏந்துங்கை
ஈனராயுப்
புக்குகூழுக் கு
(இதுவே சரியான
பொருளாய் இருக்கவேண்டும் மானம் அற்று மற்ற அறா வறியோர் ஏந்தும் கை ஈனராய் உப்புக்குக்
கூழுக்கு )
mAnamaRRu maRRa vaRAvaRiyOr Endungkai
InarAyup pukkukUzhuk ku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam