24th
March, 2015
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
(குறள் 1063:
இரவச்சம் அதிகாரம்)
இன்மை - வறுமையென்னும்
இடும்பை - துன்பத்தை
இரந்து - யாசித்து
தீர்வாமென்னும் - தீர்த்துக்கொள்ளலாம் என்கின்ற
வன்மையின் - நெறியற்ற முறையிலும்
வன்பாட்டது இல் - பொறுப்பற்றவொன்று (முருட்டுத்தனம் ) வேறு
இல்லை.
வறுமையின் துன்பதை, இரப்பதால்
தீர்த்துக்கொள்வோம் என்கிற நெறியற்ற முறையிலும், பொறுப்பற்ற செயல் (முருட்டுத்தனம்)
வேறொன்றும் இல்லை. வன்மை என்று சொல்வதேன்? இரத்தல் என்பது நெறியற்ற வழக்காம். வறுமைத்
துன்பத்தை அதைக் கைகொள்ளல், இரவாமை என்கிற நெறிக்கு எதிரானதாகையால், இன்மை இடும்பையாயினும்,
இரத்தல் வன்மையாயிற்று. ஏன் வன்பாடு? நெறியற்ற வழி என்று அறிந்து அவ்வழியிலே செல்வதால்
அது பொறுப்பின்மையும் ஆயிற்று.
Transliteration:
Inmai
iDumbai irandutIr vAmennum
Vanmaiyin
vanpATTa dil
Inmai -
Poverty
iDumbai –
that is miserable
irandu –
by seeking alms, begging
tIrvAmennum –
that it can be quelled
Vanmaiyin –
worse that such a lowly act
vanpATTadu
il – recklessness is none
There is none lowlier and reckless act than begging
alms from others to quell the misery of poverty, by begging. The words vanmai
and vanpAdu need some explaining. Since begging alms is not honorable, doing so
is considered dishonorable and hence “vanmai”. Likewise, vanpADu is sheer
recklessness in thought and action, even after knowing that something is lowly,
to pursue that.
“None
lowlier and reckless act other than the dishonorable
act of begging alms for livelihood to quell
poverty-miserable
இன்றெனது குறள்:
இல்லாக் கொடுமைக்காய் யாசிக்கும்
புன்னெறியின்
இல்லைபொறுப் பற்றவோர்செ யல்
illAk koDumaikkAi yAsikkum punneRiyin
illaipoRup paRRavOrse yal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam