மார்ச் 23, 2015

குறளின் குரல் - 1068

23rd March, 2015

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
                        (குறள் 1062: இரவச்சம் அதிகாரம்)

இரந்தும் - பிறரைத் தன் உணவுக்காகவும் யாசித்து
உயிர்வாழ்தல் வேண்டின் - உயிரை ஓம்பும் நிலையில் ஒருவனை வறுமையில் வைத்தவனாயின்
பரந்து - அலைந்து (அவனும் வறுமையின் கொடுமையை இன்னதென்று உணர்ந்து)
கெடுக - கெடட்டும்
உலகியற்றியான் - இந்த உலகைப் படைத்தோன்.

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பின்னாளில் பாரதி வெம்பிப் பாடியதை, அவனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேறுவிதமாக திருவள்ளுவர் பாடியிருப்பது வியக்கத்தக்கது. உலகைப் படைத்தோனான இறைவனே ஆயினும், அவனே ஒருவர் யாசித்து தன் உயிரைப் புரக்க வேண்டுமென்று விதித்திருப்பானாயின், அவனும் அத்தகைய வறுமையின் கொடுமையை உணர அலந்து கெடட்டும் என்று சபிக்கிறார் வள்ளுவர்.

இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து, நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உரமோடு சுட்டிய நக்கீரன் என்னும் தமிழ் புலவரைப் போலவே இறைவனையே சரியான காரணத்துக்காக, வள்ளுவர் சபிக்கவும் செய்தார் என்பதைக் கூறும் குறள்.

இறைவனைச் சாடிய வரிகளை சங்க இலக்கியங்களில் காணலாம். “ஐதே கம்மஇவ் உலகுபடைத் தோகனே” என்கிறது நற்றிணைப் பாடல் வரி. “படைத்தோன் மன்றஅப் பணிபி லாளன்”, என்னும் புறநானூற்றுப் பாடல் வரியொன்று.

Transliteration:

Irandum uyirvAzhdal vENDin parandu
keDuka ulagiyaRR iyAn.

Irandum – Begging alms
uyirvAzhdal vENDin – if someone has to keep alive
parandu – loiter and
keDuka - rot
ulagiyaRRiyAn – the Godhead that created such abject poverty

“If an individual does not have the means to have food, let the whole world be destroyed”, said BharatiyAr in disgust and anger he met with Neelakanta Brahmachari who had not eaten for several days.  It is really surprising to that 2000 years prior to him vaLLuvar, being the forerunner and  had expressed the same anger, and disgust and even cursed the Godhead, if he was the reason for such abject poverty in an individual.

Even if it was Godhead that had made a man to go and beg alms, let Him be cursed to have the same plight to understand the misery of poverty, says vaLLuvar!

Another Sangam poet, NakkIrar had found fault in Lord Shivas’ poetry and dared to say, even if  it was Godhead and he even opened his third eye to burn, His poem had a mistake and he was not going to be afraid to point that out.

Poets were never afraid to point a mistake wherever it was, even if it was Godhead.

“Even if it is God that made a person to beg for livelihood
 Let him also loiter and rot for having created such a world”


இன்றெனது குறள்:

இரக்கப் படைத்தோன் இறைவனே ஆயின்
நிரப்பில் கெடுக அலைந்து

irakkap paDaiththOn iRaivanE Ayin
nirappil keDuga alaindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...