107: (Dread of Begging - இரவச்சம்)
[Though the previous chapter did not put “seeking alms” - an
honorable way of mentioning begging, in dim light, this chapter clearly implies
it as something to be dreaded, especially by those who see it as dishonorable.
Though begging for alms was recommended for those struck with poverty earlier,
people of respect and high place in life, are not recommended the same as
begging is beneath their honor]
22nd
March, 2015
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
(குறள் 1061:
இரவச்சம் அதிகாரம்)
கரவாது - தம்மிடம் உள்ளவற்றை சற்றும் மறைக்காது
உவந்தீயும் - மகிழ்ச்சியோடு ஈயும்
கண்ணன்னார் கண்ணும் - கண்ணைப் போன்றவரிடத்தும் (புலன்களில் கண்ணே
சிறந்தது)
இரவாமை - யாசகம் கேட்காமை
கோடி உறும் - இரந்து பிழைத்தலிலும் கோடி மடங்கு பெரிதாம்
தம்மிடம் உள்ள பொருளை மறைக்காது, தம்மிடம் இரந்து கேட்போர்க்கு
இல்லையெனாது வழங்கும் கண்களைப் போன்றாராம், அருமையான ஈவார் மாட்டும், இரந்து கேட்காமல்
இருத்தல், அவ்வாறு கேட்டு மானக்கேடு உறுவதிலும் மேலாம். ஈவது பெருமையே ஆயினும், இரப்பது
மானக்கேடாகவே கருதப்பட்டுள்ளது. கழைதின்
யானையார் என்ற புலவரின் புறநானூற்றுப்
பாடல் மிகவும் அழகாக ஈதலையும் இரத்தலையும் பற்றி கீழுள்ள வரிகளால் கூறுகிறது.
“ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”
இக்குறளின் கருத்தினையொட்டிய நாலடியார் பாடலொன்று, “மறுமை
இம்மை நிலைகளைக் கருதி, கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்;
அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும் , பிறரை இரவாமலிருப்பது, அவ்வறுமைக்
காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும்” என்கிறது. அப்பாடல்:
மறுமையும் இம்மையும்
நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ
கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா
தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி
யுறும்.
மற்றொரு நாலடியார்
பாடலும், “தமக்கொன்று ஒளியாத உறுதியான மெய்
அன்பினையுடைய கண்போன்ற அன்பர்களிடத்தும் யாதும் இரத்தல் செய்யாது வாழ்வது வாழ்க்கையாகும்;
இரத்தலாகிய செயலை நினைக்கும்பொழுதே உள்ளம் கரையும்; அவ்வாறானால், பிறரிடம் ஒன்று ஏற்குங்
காலத்தில் அங்ஙனம் ஏற்பவரது கருத்துத்தான் எவ்வாறு நையாதிருக்கும் என்று கேட்கிறது.
அப்பாடல்:
கரவாத திண்
அன்பின் கண் அன்னார்கண்ணும்
இரவாது வாழ்வது
ஆம் வாழ்க்கை; இரவினை
உள்ளுங்கால்
உள்ளம் உருகுமால்; என்கொலோ,
கொள்ளுங்கால்
கொள்வார் குறிப்பு?
Transliteration:
karavAdu uvandIyum kaNNannAr kaNNum
iravAmai kODi uRum
karavAdu – Not hiding their wealth
uvandIyum – feeling happy by being benevolent
kaNNannAr kaNNum – even with people as precious as own
eyes
iravAmai – not begging alms
kODi uRum – is certainly better more than crore
times, than begging
It is more
than a million times better not to beg for alms even from persons that are as
precious as own eyes, do not hide what they have as their wealth, and generously
give to those begging. It is indeed honorable not to beg for alms from anyone;
an underlying emphasis of this verse.
A verse from
puranAnURu says it beautifully. To seek by begging is disgraceful. To refuse to
heed to that is even worse. Likewise, to offer without hesitation is exalted.
To refuse politely and honorably is even more exalted.
“It is million times better not to beg
alms even from a benevolent soul
as precious as ones’ eyes, if even they
happily extend a helping bowl”
இன்றெனது குறள்:
ஒளிக்கா துவந்து தரும்நல்லார்
மாட்டும்
துளியும் இரவாமை நன்று
oLikkA duvandu tarumnallAr mATTum
tuLiyum iravAmai nanRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam