மார்ச் 25, 2015

குறளின் குரல் - 1070

25th March, 2015

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடனில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
                        (குறள் 1064: இரவச்சம் அதிகாரம்)

இடமெல்லாம் - இவ்வுலகையே கொடுத்தாலும்
கொள்ளாத் தகைத்தே - அதுவும் நிறைவிலாத அளவுக்குப் பெருமையாம்
இடன் இல்லாக்காலும் - தமக்கு வறுமை வந்துற்ற பொல்லாக் காலத்தும்
இரவு ஒல்லாச் - இரந்துதான் வாழ்வதே வழியென்று நினைக்காத
சால்பு - மேன்மை

ஒருவருக்கு இடருற்ற பொல்லாக் காலத்திலும் இரந்து வாழ்வதே வழியென்றிராத அவரது மேன்மைக்கு, இவ்வுலகையே கொடுத்தாலும் நிறைவில்லாத அளவுக்குப் பெருமையாம் அது; இடரினும் தளரினும் தன்னிலைத் தாழா மானத்தோடு வாழ்தலைச் சிறப்பிக்கும் குறள். தவிரவும் இரத்தல் என்பது நெறியற்றது என்று கூறப்பட்டதால், அதை சால்புடையோர் செய்யார் என்றும் உணர்த்தப்படுகிறது.

Transliteration:

iDamellAm koLLAt thagaittE iDanillAk
kAlum iravoLLach chAlbu

iDamellAm – Even if the entire world is given to them
koLLAt thagaittE – that would also not suffuce for their glory (for who?)
iDan illAkkAlum – for those that, even during their bad times
iravu oLLach – not considering begging as means for their subsistence
chAlbu – their exalted virtue

For the glory of people with exalted virtues, it is not enough even if entire world is given, because, even during their utmost difficult times (of having to go without means for living), not considering begging as a means to sustain.

Whether withering or subjected to the ordeals of bad times, they never go lowly to keep their life sustained, begging alms or doing anything that would be beneath their pride. Also, since it has been said earlier that begging is not virtuous, implied here is that people of exalted virtue would never do that.

“It would not suffice to give even the whole world for their glory,
For who shall not beg even if they are in dire times of dreary”


இன்றெனது குறள்:

எவ்வுலகும் கொள்ளாப் பெருமையே மேன்மையோ
டெவ்விடர்கா லத்துமிர வார்க்கு

evvulagum koLLAp perumaiyE mEnmaiyO
devviDarkA laththumira vArkku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...