இராகம்: கௌளை தாளம்: ஆதி (¾ தள்ளி)
பல்லவி:
ஆனைமுகனை அரவாபரணன் மகனை
ஆண்டருள் விநாயகனை அனுதினமவன் அருள்பெறநினை
அனுபல்லவி
வானைக் கடலையிவ் வையமுங் கடந்துநிறைந்
தோனை தேவர்களில் மூத்தோனை முழுமுதல்தேவனை
சரணம்:
பானைவயிறாயினும் பக்தர்க்குப் பரிந்தோடு
வானை மூவர்க்கும் மேலாம் கோனை முந்துதமிழ்
தேனை தெளிவை என்றும் தெவிட்டா அமுதாகு(ம்)
வானை வாக்கினில் வருவோனை வரகுஹன்
அண்ணனை
இப்பாடல் யார் எழுதியது என்று குறிப்பிடவில்லையே?
பதிலளிநீக்குஅடியே எழுதிய பாடலேதான்.
பதிலளிநீக்கு