பிப்ரவரி 11, 2015

குறளின் குரல் - 1028

11th Feb 2015

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி.
                    (குறள் 1022: குடி செயல்வகை அதிகாரம்)

ஆள்வினையும் - நன்முயற்சியும்
ஆன்ற அறிவும் - ஆழ்ந்த அறிவும்
எனவிரண்டின் - என இரண்டோடு கூடிய
நீள்வினையான் - இடையறா செயலாக்கத்தால்
நீளும் குடி. - ஒருவரது குடி உயரும்.

ஓருவரது நல்ல முயற்சியும், ஆழ்ந்த அறிவும் ஆகிய இரண்டோடும் கூடிய இடையறா செயலாக்கத்தால் ஒருவரது குடி உயரும், என்கிறது இக்குறள். ஆழ்ந்த அறிவோடு கூடிய சீரிய முயற்சியும், தவிர தளராத கருமமாற்றலுமே ஒருவரது குடியானது உயர்த்தும்

Transliteration:

Alvinaiyum AnRa aRivum enaviraNDin
nILvinaiyAn nILum kuDi

Alvinaiyum – good effort
AnRa aRivum – and deep knowledge
enaviraNDin – with these two
nILvinaiyAn – and incessant untiring effort and performance
nILum kuDi – will raise the stature of a persons’ lineage

With the twin attributes of a persons’s good effort and deep knowledge, and his perseverance in performing the dees, a persons’ lineage raises to high stature, says this verse. It is indeed true that,  to get deeds done successfully, a person needs deep knowledge and excellent effort. Apart from those two success ingreidents, one needs untiring effort to get them done successfully. Only such persons lineage will be up in stature.

“Coupled with twin attributes of deep knowledge and effort of excellence
 What raises the staure of a lineage is a persons’ untiring perseverance


இன்றெனது குறள்:

ஆழ்ந்த அறிவோடு நன்முயற்சி என்றிரண்டும்
சூழ்கரும மேகுடிக்கு யர்வு

Azhda aRivODu namuyaRchi enRiraNDum
Suzhkaruma mEkuDikku yarvu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...