15th
Feb 2015
நல்லாண்மை
என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை
ஆக்கிக் கொளல்.
(குறள் 1026:
குடி செயல்வகை அதிகாரம்)
நல்லாண்மை
என்பது - நல்ல ஆளுமை என்பது
ஒருவற்குத்
தான்பிறந்த இல் - ஒருவற்குத் தாம் பிறந்த குடியை
ஆண்மை ஆக்கிக் கொளல் - நன்கு வழிப் படுத்தி உயர்த்துவதேயாம்
ஒருவருக்கு நல்ல ஆளும்
வல்லமை என்பது, தாம் பிறந்த குடியினரை நன்கு நெறிப்படுத்தி, உயர்த்துவதேயாம். தம்மைச்
சார்ந்தவரையே தம் ஆளுமைக்கு உட்படுத்த முடியாதவரை ஆளுமை உடையவராகக் கொள்வது எங்கனம்?
குடியினரை உயர்த்துவதாலேயே அது நல்லாண்மை என்றும் கூறப்படுகிறது.
Transliteration
nallANmai
enba doruvaRkut tAnpiranda
illANmai
Akkik koLal
nallANmai
enbadu – A good ability to govern is
oruvaRkut
tAnpiranda ill – for somebody to work with the lineage
he was born into
ANmai
Akkik koLal – and uplift it to glorious stature
When a person is able to guide and uplift his
lineage to a good and glorious stature, he is acknowledged to govern good. How
could he be construed to have the ability to govern, if a person is not able to
govern and guide his own lineage? Because of the ability of to uplift to
glorious stature, vaLLuvar calls such governing ability as “naLLANmai”
“Ability
to uplift own kin and lineage to a great stature
is truly acknowledged to be good governance,
mature”
இன்றெனது
குறள்:
தன்குடியை
நல்வழி ஆண்டு உயர்த்துவோனே
நன்காளும்
வல்லமைகொண் டோன்
thankuDiyai
nalvazhi ANDu uyarththuvOnE
nangALum
vallamaikoN DOn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam