16th
Feb 2015
அமரகத்து
வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார்
மேற்றே பொறை.
(குறள் 1027:
குடி செயல்வகை அதிகாரம்)
அமரகத்து -
போர்களத்தில்
வன்கண்ணர்
போலத் - (பொறுப்பேற்று) செயலாற்றும் பெரிய வீரரைப்போல
தமரகத்தும் -
தமது குடியையும்
ஆற்றுவார்
மேற்றே - உயர்த்தும் வகையிலே செயலாற்றுவார் மேலேதான்
பொறை -
அப் பொறுப்பின் சுமையும் சேரும்
குடியிலே யாருக்குத் தலைமைப் பொறுப்பு சேரும் என்பதைக்
கூறும் குறள். போர்களத்தின்கண் பல வீரர்கள் சென்றாலும், ஆற்றலுடன் தலைமைப் பொறுப்பை
ஏற்று நடத்துபவர் தலைமையே வேண்டப்படும் என்பதால், தம் குடியின்கண்ணே அதை உயர்த்தும்
வகையிலே செயலாற்றுவார் மேலேதான் அப் பொறுப்பின் சுமையும் வந்து சேரும்.
Transliteration:
Amaragaththu
vankaNNar pOlAth thamaragaththum
ARRuvAr
mERRE poRai
Amaragaththu –
In the battlefield
vankaNNar
pOlAth – like the valiant that bears the responsibility of
leading
thamaragaththum –
even among their kith and kin
ARRuvAr
mERRE – only on those that strive to uplift them
poRai –
shall bear the burden or responsibilityof it.
This verse answers the question as to who can really
bear the responsibility of uplifting their kith and kin. Though many warriors
go to battle field, only the valiant that has the innate ability to lead has
the responsibility to lead. Likewise, among the kindred, only who that strives
to uplift them together can bear the responsibility of leading them.
“The
valiant bears the responsibility of leading in the battlefield
Likewise, that who uplifts the kindred bears
the burden to shield”
இன்றெனது
குறள்:
போர்க்களத்து
வீரர்போல் ஆற்றும் சுமைசெயல்
பார்த்தகத்தில்
செய்வார்க்கே யாம்
pOrkaLaththu vIrarpOl ARRum sumaiseyal
pArththagaththil seivArkkE yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam