14th
Feb 2015
குற்றம்
இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச்
சுற்றும் உலகு.
(குறள் 1025:
குடி செயல்வகை அதிகாரம்)
குற்றம்
இலனாய்க் - தவறானவற்றைச் செய்யாமல்
குடி
செய்து வாழ்வானைச் - தம்முடைய குடியினை மேன்மையுற செய்து வாழ்வானை
சுற்றமாச் -
தமது சுற்றமாகக் கொள்ள விரும்பி
சுற்றும் -
அவரைச் சுற்றிவரும்
உலகு -
இவ்வுலகானது.
தாமும் எத்தகைய தவறான
செயல்களையும் செய்யாமல் தம்முடைய குடியையும் மேன்மையுறச் செய்து வாழ்வாரைத் தம்முடைய
சுற்றமாகக் கொள்ள விரும்பி அவரையே சுற்றிவருவர் உலகோர், என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.
எளிய கருத்தை தெளிவாகச் சொல்லும் குறள்.
மேன்மையானவரை தம் வழிகாட்டியே
உலகில் வாழ்வு நெறி அறிந்த எல்லோரும் கொள்ளும் ஒன்றாக இருத்தலால், பொதுவான உலக வழக்கான
ஒன்றைக் குறிப்பதற்காக “உலகு” என்கிறார் வள்ளுவர்
Transliteration:
kuRRam
ilanAik kuDiseidu vAzvAnaich
suRRamach
suRRum ulagu
kuRRam ilanAik – Not doing wrongful deeds
kuDi
seidu vAzvAnaich – one that is in pursuit of uplifting
the lineage
suRRamach –
to have as kith and kin
suRRum –
will revolve around such person
ulagu –
the world
The world will embrace and revolve around the persons
that are not ever indulgent in any wrongful deeds, always in the pursuit of
uplifting and making it better, says this verse. Simple thought expressed
clearly and succinctly.
Exemplary people and their ways are taken role model
and model respectively. To imply that general practice vaLLuvar uses the word “ulagu”.
“The world will embrace and revolve around persons
that do no wrongful
and are in the pursuit upholding the glory of
lineage, as their kin, heartful”
இன்றெனது
குறள்:
உறவென சூழும்
உலகெலாம் குற்றம்
அறகுடி மேன்மை
உற
uRavena
sUzhum ulagelAm kuRRam
aRakuDi
mEnmai uRa
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam