பிப்ரவரி 08, 2015

குறளின் குரல் - 1026

9th Feb 2015

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
                    (குறள் 1020: நாணுடைமை அதிகாரம்)

நாண் அகத்தில்லார் - பழிக்கு வெட்குதலை தம் உள்ளத்தில் இல்லாதார்
இயக்கம் - உயிருடையவர்களைப்போல் இயங்குவதென்பது
மரப்பாவை - மரத்தினால் செய்த பொம்மை
நாணால் - கயிற்றால் ஆட்டுவிக்கப்பட்டு
உயிர் மருட்டி அற்று - உயிர்ப்புள்ளதாக மயக்குவது போலாம்.

தம் உள்ளத்தில் பழிக்கு வெட்கும் நாணுடைமை இல்லாதவர்கள் உயிருள்ளவர்களைப்போல் இயங்குவது, மரத்தினால் செய்த பொம்மை, கயிற்றால் ஆட்டுவிக்கப்பட்டு, உயிர்ப்புள்ளதாக மயக்குவது போலாம். பழிக்கஞ்சி நாணாரை உயிரற்ற் அஃறிணைப் பொருளெனவே உருவகித்து இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார் வள்ளுவர்.

Transliteration:

nANagat tillAr iyakkam marappAvai
nANAl uyirmaruTTi aRRu

nAN agattillAr – Devoid of sense of shame in their hearts
iyakkam – their active state
marappAvai – a wooden puppet
nANAl – with a string
uyir maruTTi aRRu – pretends as if truly lively

The apparent activities of people without the sense of shame for the blameful and sinful deeds in their hearts, is akin to the activities of a wooden puppet, a make belief act by the string attached to it. In either case they are deemed to be truly lifeless and declared so by vaLLuvar in this concluding verse of the chapter.

“Activities of people without the sense of shame in their mind
 is like wodden puppet shown to be active by its strings’ bind”


இன்றெனது குறள்:

கயிற்றால் இயங்கும் மரப்பாவை போலாம்
உயிர்ப்பும்நாண் உள்ளத்தி லார்க்கு

kayiRRAl iyangum marappAvai pOlAm
uyirppAmnAN uLLaththi lArkku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...