8th
Feb 2015
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
(குறள் 1019:
நாணுடைமை அதிகாரம்)
குலஞ்சுடும் - நற்குடிப் பிறப்புக்கு இழுக்கு ஏற்படும்
கொள்கை பிழைப்பின் - ஒழுக்கம் வழுக்குமாயின், கெடுமாயின்
நலஞ்சுடும் - கிடைக்கும் அனைத்து நன்மையும் இல்லாதொழியும்
நாணின்மை - பழிக்கு வெட்கும் பண்பு இல்லாதிருத்தல்
நின்றக் கடை - நிலைத்து விடுமானால்
ஒருவரது ஒழுக்கமானது கெடுமாயின் அவரது குடிபிறப்புக்குத்தான்
அது இழுக்காகும். ஆனால், அவருக்கு பழிக்கு வெட்கும் பண்பு இல்லாது நிலைத்து விடுமானால்,
அனைத்து நன்மைகளும் இல்லாது ஒழியும். அனைத்து நன்மைகள் என்பதை பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்று
எல்லாவற்றையும் ஒன்றாகக் கூறுவார் பரிமேலழகர்.
ஒழுக்க அழிவை
விட ஒழுக்க அழிவினால் வரும் இழுக்கத்துக்கு நாணாமை பெரிய தீமையென்பது இக்குறளின் மையக்கருத்து.
Transliteration:
kulanchuDum koLgai
pizhaippin nalanjchuDum
nANinmai ninRak
kaDai
kulanchuDum – It will be detrimental to lineage
koLgai pizhaippin – if a
person strays away from virtuous path
nalanjchuDum – But all
good will be destroyed
nANinmai – if sense
of shame is not there
ninRak kaDai – and such
a state stays put
If a person strays away from virtuous nature, his noble
lineage will be harmed.; but if the person loses the sense of shame and stays
put in that state, then he will lose all good due to him. ParimElazhagar would
list the good to be noble birth, education, virtues, his deeds, and clan etc.
Worse than straying away from virtues is not being
shameful about the same, implies vaLLuvar in this verse as the central thought.
“Straying
away from virtues, only the lineage will be affected,
But all the good will be lost if sense of
shame is lost, ignored”
இன்றெனது
குறள்:
விழுப்பங்
கெடுமே ஒழுக்கம் வழுக்க;
விழுப்பமே
நாணார்க்கு இல்
(விழுப்பம்
- குலம், நன்மை இரண்டுக்குமானது)
vizhuppang
keDumE ozhukkam vazhukka
vizhuppamE
nANArkku il
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam