7th
Feb 2015
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
(குறள் 1018:
நாணுடைமை அதிகாரம்)
பிறர் நாணத்தக்கது - மற்றோரெல்லாம் வெட்கும்படியான பழிக்கு
தான் நாணானாயின் - ஒருவர் தாம் நாணாது இருப்பரேயானால்
அறம் நாணத்தக்கது - (அது) அறம் கூட வெட்கி அவரை நீங்கும்படியான
குற்றத்தை
உடைத்து - கொண்டது போலாம்
ஒருவர் மற்றவர்கள்
எல்லோரும் வெட்கும் படியான பழிச்செயல்களுக்கும் தாம் நாணாது இருந்தால், அவரை அறங்கூட
வெட்கி நீங்குபடியான குற்றத்தை அவர் புரிந்ததுபோலாகும் என்பது குறள் சொல்லும் கருத்து.
பொதுவாக எல்லோரும்
வெட்கும்படியான பழி என்றால், அது மிகவும் இழிதரும் செயலாகத்தான் இருக்க வேண்டும். அச்செயல்களுக்குக்
கூட ஒருவர் நாணவில்லையெனில் அறமானது, அந்த ஒருவரையே பழியாக எண்ணி நீங்குகிற அளவுக்கு
குற்றத்தின் உச்சமாகிவிடும் என்பதே வள்ளுவர் உணர்த்துவது.
Transliteration:
piRarnANat
takkadu tAnnANA nAyin
aRamnANath
takkadu uDaittu
piRar
nANattakkadu – Blameful that others shyaway from
tAn
nANAnAyin – if a person is not shameful abou such deeds
aRam
nANathtakkadu – (they), the even the very virtue will shy away
from him for that fault
uDaittu –
such is the extent of that (shameful deed)
When someone does not feel shameful for sinful deeds
that others are usually ashamed of, even the virtue will leave them, feeling
shameful about that someones’ conduct.
When everyone is shameful about something, it must
be a sinful deed indeed. When someone is not even shameful such a deed, virtue
will see that person as shameful and leave him; His fault is such an extreme
one is what this verse alludes.
That
others feel ashamed of, when a person is not ashamed
Even
the virtue will forsake him, feeling extremely abashed”
இன்றெனது
குறள்:
மற்றவர்
நாணுதற்கு நாணார் அறம்நாணும்
குற்றமுடைத்
தாரென்று கொள்
maRRavar nANudaRku nANAr aRamnANum
kuRRamuDaith thArenRu koL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam