பிப்ரவரி 05, 2015

குறளின் குரல் - 1023

6th Feb 2015

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
                    (குறள் 1017: நாணுடைமை அதிகாரம்)

நாணால் - பழி தருவன வரும்போது, அவற்றுக்காக வெட்குபவர்
உயிரைத் துறப்பர் - தம்முடைய உயிரையும் விட்டுவிடுவர்
உயிர்ப் பொருட்டால் - உயிரைக் காப்பாறிக்கொள்வதற்காக
நாண் துறவார் - நாணுடைமையாக பண்பை விட்டுவிடமாட்டார்
நாணாள்பவர் - நாணுடைமையை நல்லறமாகப் பேணுபவர்.

நாணுடைமையைத் தம் உயிரினும் மேலாகக் கருதி, அதையே நல்லறமாக கொண்டொழுகுபவர்கள், பழிபாவங்களுக்கு வெட்குவதால், பழிவருங்கால் நாணுடைமை நீங்கியதே என்று தம்முடையை இன்னுயிரையும் விட்டுவிடுவர். தம்முடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காய் நாணுடைமையாகிய நல்லறத்தை அவர்கள் என்றும் நீங்கார்.

மானம் அதிகாரத்தில், இதே பொருளில் வரும் குறளை ஏற்கனவே கண்டிருக்கிறோம்.

மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்.’

மானம் நீங்கினால் உயிரைத் துறப்பர் என்றதில் வியப்பில்லை.  பழிபாவங்களுக்கு அஞ்சுபவருக்கு மானம் என்பது ஒரு நிலைப் பண்பே. அப்பண்பாகிய நாணுடைமைக்கு நலிவு வருங்கால், அது மானக்கேட்டையும் குறிப்பதால், மானமும், நாணுடைமையும் உடையவர் அவை நீங்குதற்கான பழி வரும்போது உறுதியாக உயிரையும் விட்டுவிடுவர்.

Transliteration:

nANAl uyiraith tuRappar uyirporuTTAl
nANtuRavAr nANAL bavar

nANAl – For preserving sense of shame
uyiraith tuRappar – will even sacrifice their life
uyirporuTTAl – For preserving their life
nANtuRavAr – will not forsake the virtue of sense of shame
nANALbavar – those hold high that virtue

Those who hold high the virtue of sensitivity to shame, more than their own life, would even sacrifice their life if they have shame even by chance or without their cognizance. They would never sacrifice the virtue for the sake of preserving their life ever.

We have seen a similar thought in the chapter of “Honor” earlier, where vaLLuvar had said through the verse, “mayir neeppin..”, people that hold honor high would sacrifice their own life if there was a situation that would diminish their honor even  a little bit.

Both honor and sensitivity to shame are related concepts. Hence sacrificing life in either case, if there was threat to either, is not that unthinkable.

“Fearing blame, those that have sense of shame would even sacrifice life
 But they wouldn’t sacrifice their sense of shame even for the sake of life”


இன்றெனது குறள்:

பழியஞ்சி துஞ்சுவர் துஞ்சுதற் கஞ்சி
இழிகொளார் நாணுடைநல் லோர்

pazhiyanji tunjuvar tunjudaR kanji
izhikoLAr nANuDainal lOr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...