பிப்ரவரி 04, 2015

குறளின் குரல் - 1022


5th Feb 2015

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
                    (குறள் 1016: நாணுடைமை அதிகாரம்)

நாண் - பழி பாவங்களுக்கு வெட்குகின்ற பண்பாகிய
வேலி கொள்ளாது மன்னோ - வேலி அல்லது அரணை தம்மைச் சுற்றி அமைத்துக்கொள்ளாது
வியன்ஞாலம் - பரந்த இவ்வுலகம்
பேணலர் - விரும்ப மாட்டார்
மேலாயவர் - உயர்ந்த பண்புகளை உடையவர்

பழிபாவங்களுக்கு அஞ்சுதலாகிய நாணுடைமையை வேலியாகக் கொண்டால் அல்லது,  பரந்த இவ்வுலகத்தையும் விரும்பமாட்டார் உயர்ந்த குணங்களை உடைய மேலோர். பரந்த உலகத்தையும் விட என்றதால், அதன் மதிப்பையும், நாணுடைமையே அதைவிடவும் மிகவும் மதிக்கப்படுகிற ஒன்றாகவும் சொல்லப்படுகிறது.

Transliteration:

nANvEli koLLAdu mannO viyannjAlam
pENalar mElA yavar.

nAN – The virtue of shying away from the sinful and blameful
vEli koLLAdu mannO – not having that fence/hedge as the protection to safeguard
viyan njAlam – even if the entire world is theirs
pENalar – they would not desire
mElAyavar – people of great stature, nature

But for the defensive hedge of shyness to blame and sin, even if the expansive world is theirs, people of great nature and staure would not desire that, says this verse. Since the expansive world is mentioned in comparison, the worth of that is implied and compared with the hedge against the blame and sin; implied meaning is that the hedge is more worthy than the world itself.

“People of great nature and stature would prefer the hedge
 Of shyness for sin and shameful instead of upto earths’ edge”


இன்றெனது குறள்:

நாணரண் அல்லா துலகில் உயர்ந்தோர்க்கு
பேணரண் வேறில்லை யாம்

naNraN allA dulagil uyarndOrkku
pENaraN vERillai yAm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...