1st
Feb 2015
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
(குறள் 1012:
நாணுடைமை அதிகாரம்)
ஊண் - உண்ணும் ஊணவும்
உடை - உடுக்கும் உடையும்
எச்சம் - மற்ற பிற மேன்மையாகக் காட்டுகிற அடையாளங்களும்
உயிர்க்கெல்லாம் வேறல்ல
- எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை
நாணுடைமை - ஆனால் பழிக்கஞ்சி நாணுதல்
மாந்தர் சிறப்பு - நல்ல மக்களை சிறப்பாக வேறுபடுத்தி காட்டுவதாம்
எல்லோருக்குமே உணவும், உடையும், மற்ற பிற அடையாளங்களும்
பொதுவானவையே, அவர்களை சிறப்பித்து காட்டாதவை. அதாவது எல்லோருமே உண்ணுகிறார்கள்; உடுக்கிறார்கள்,
மற்றபல அடையாளக் குறிகளால் தங்களை பொருளாதார மேன்மை உடையவராக, சிறப்புகள் வாய்ந்தவர்களாகக்
காட்டிக் கொள்கிறார்கள். அறுசுவை உண்ணுவதாலும், அழகான உடை உடுப்பதாலும் ஒருவர் மேன்மையுறுவதில்லை.
ஆனால் ஒருவரை சிறந்தவராகக் காட்டுவது அவரது பழிபாவத்துக்கு அஞ்சுகிற நாணுடைமையேயாம்.
Transliteration:
UNuDai
echcham uyirkellAm vERall
naNUDaimai
mAndar siRappu.
UN –
the food that one consumes
uDai –
the dresses that he wears
echcham –
other decorations that show the apparent glory
uyirkellAm
vERall – are all not different for anyone.
naNUDaimai –
the sensitivity to shame
mAndar
siRappu – makes all the differenc and is the true glory
Food that people eat, the dresses they wear are
common features in everyones’ life, not different; they don’t show them in
exemplary light. After all everyone eats and wears dresses and show through
other attributes their status and assumed glory etc,. The gourmet food or
beautiful dresses don’t show the true glory of anyone. What makes a person
truly exemplary is their sensitivity to shame that they show when they even
inadvertently involved in blameful deeds.
“Food,
dresses and other such similar needs are common;
But the sensitivity to shame is the real
differentiating one”
இன்றெனது
குறள்(கள்):
உணவும் உடையும்
பிறவும் பொதுயார்க்கும்
வணங்கும்
சிறப்பினதோ நாண்
uNavum
uDaiyum piRavum pothuyArkkum
vaNangum
siRappinadO nAN
சிறப்பென்ப
ஊணுடையும் மற்றதும் அன்று
அறம்துறக்கா
நாணுடைமை யாம்
siRappenba UNDaiyum maRRadum anRu
aRamthuRakkA nANuDaimai yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam