10th
Jan 2015
சான்றவர் சான்றாண்மை குன்றின்
இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
தாங்காது மன்னோ பொறை.
(குறள் 910:
சான்றாண்மை அதிகாரம்)
சான்றவர் - குணங்களால் மேன்மையுற்ற சால்புடையோர்
சான்றாண்மை - தம் மேன்மையான குணங்களிலே
குன்றின் - சற்றே குன்றினாலும்
இருநிலந்தான் - இவ்வுலகம்தான்
தாங்காது மன்னோ - அதை கண்டு தாங்கிக்கொள்ளாது
தாங்காது மன்னோ - அதை கண்டு தாங்கிக்கொள்ளாது
பொறை - பொறுமையுடன்
இவ்வதிகாரத்தின் இறுதிக் குறளாக, பண்புகளால் மேன்மையுற்றோர்,
தமது இயல்பிலிருந்து சற்றே பிறழ்ந்தாலும் இவ்வுலகம் அதை சற்றும் பொறுத்துக் கொள்ளாது
என்று கூறி, உலகினரின் நன்மைக்காக, சான்றோர்க்கழகு சான்றாண்மையில் நிலைபடுதல் என்பதை
வலியுறுத்துகிறார் வள்ளுவர். சிறிது சுயநலமாக தோன்றினாலும், சில சொற்றொடர்கள் உலக நன்மைக்காகச்
சொல்லப்படுவன. “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை
அல்லவா?”
Transliteration:
sAnRavar
sAnRANmai kunRin irunilanthAn
thAngAdu
mannO poRai.
sAnRavar –
people of excellent virtues
sAnRANmai –
If their sublimity
kunRin –
diminishes
irunilanthAn –
this earth
thAngAdu
mannO – shall not tolerate that
poRai –
with patience.
In this final verse of this chapter, vaLLuvar says,
if the people of utmost excellence in virtues, lose even a little bit of their
sublime nature, this world shall not tolerate patiently, thus emphasizing that
sublime people must stay as such without deviating in their virtues ever.
Though it may sound selfish, certain phrases exist for the worldly good. One
such phrase is that, even if there is one person that is virtuous then, because
of him, rains will fall without fail.
“Even
if a little bit diminished in his virtues, sublime and perfect
World shalln’t bear its burden with patience
as ordained plight”
இன்றெனது
குறள்:
இவ்வுலகம்
சால்புடையோர் தங்குணத்தில் குன்றிட
எவ்வாறு
தாங்கும் பொறுத்து?
Ivvulagam
sAlbuDaiyOr thanguNaththil kunRiDa
evvARu
thAngum poRuththu?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam