9th
Jan 2015
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
ஆழி எனப்படு வார்.
(குறள் 989:
சான்றாண்மை அதிகாரம்)
ஊழி பெயரினும் - உலகே அழியும்படியான ஊழி வரினும்
தாம் பெயரார்
- தாம் தம்முடைய இயல்பிலிருந்து சற்றும் மாறாதார்
சான்றாண்மைக்கு - சால்புடைமைக்கு
ஆழி எனப் படுவார் - சாகரம் போன்று ஆன்று, அகழ்ந்தோர் ஆவார்
ஆழி எனப் படுவார் - சாகரம் போன்று ஆன்று, அகழ்ந்தோர் ஆவார்
ஊழிப் பிரளயமே தோன்றி உலகையே புரட்டிப் போட்டாலும், சான்றாண்மையில்
சற்றும் மாறாதவர் சால்புடைமையில் கரை காணமுடியாமல் ஆழ்ந்து, அகன்ற சாகரம் போல்வர்,
என்கிறார் வள்ளுவர் இக்குறளில்.
“பழங்குடி
பண்பில் தலைபிரிதல் அன்று” என்று
ஏற்கனவே குடிமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறியிருக்கிறார் அல்லவா?
“சான்றோர் கடன்நிலை குன்றலும் இலர்” என்று நற்றிணைப் பாடல் வரியொன்று கூறுவதும், “தோல்
வற்றிச் சாயினும் சாகன்றாண்மை குன்றாமை” என்று திரிகடுகப் பாடல் கூறுவதும் இத்தகையோரைப்
பற்றிதான்.
Transliteration:
Uzhi peyarinum thAmpeyarAr sAnRANmaikku
Azhi enappaDu vAr
Uzhi peyarinum – Even if the destructive end of world happens
thAmpeyarAr – they will not change
sAnRANmaikku – in their virtue of excellence or sublimity
Azhi enap paDuvAr – are known as deep and vast ocean without shores
Even if the
destructive storm, as if to cause the end of world, happens, the people of
excellence will not change in their virtue, whose sublimity is shoreless and
unfathomable ocean – says vaLLuvar.
vaLLuvar has
already said it similarly in the chapter of “Noble lineage” that people of high
birth and excellence shall not wean or deter in their virtues.
Once again lines of
poetry in many literary works such as nARRinAI, thirikaDugam and puRapporuL
venpA mAlai all say similarly.
“Even if the destructive storm happens for
the world to end
People
of excellence shall not deter in sublimity they defend”
இன்றெனது
குறள்:
சால்பிலே
சாகரம்போல் ஆழ்ந்தகன்றோர் தாமகலார்
சூல்கொண்டு
ஊழியழித் தும்
sAlbilE sAgarampOl AzhndaganROr thAmagalAr
sUlkoNDu Uzhiyazhith thum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam