ஜனவரி 11, 2015

குறளின் குரல் - 997

100: (Courtesy- பண்புடைமை)

[Being Congruent, compassionate to others, always, is a virtue, an attribute that is only possible for people of sublime nature; they are genuinely concerned when others are in distress and willingly are ready to help; they share their food; shy away from blame. This chapter discusses the virtue of courteousness]

11th Jan 2015

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
                                    (குறள் 991: பண்புடைமை அதிகாரம்)

எண்பதத்தால் - யார்க்கும் எளிதில் அணுகக்கூடிய எளிமை உடைத்தால்
எய்தல் - அடைவது
எளிதென்ப - எளிதாம், இலகுவாம்
யார்மாட்டும் - யாவரிடத்திலும்
பண்புடைமை என்னும் - பண்பு உடையவராக வாழுகின்ற
வழக்கு - நல் வழி.

யாவாராலும் எளிதில் அணுகிச் சென்று பேசக்கூடிய அளவுக்கு எளிமை உடையவர்க்கு பண்பு உடையவராக வாழும் நல்வழியும் எளிதாம். பண்புடைமை என்பது அன்புடனும், நல்ல குடிப் பிறப்போடும், யாவர்க்கும் உதவும் எளிமையோடு இருத்தலால், அஃதுடையோரை பிறர் அணுகி உரையாடுதலும் எளிதாம்.

Transliteration:

eNpadaththAl eidal eLidenba yArmATTum
paNbuDaimai ennum vazhakku

eNpadaththAl – having such simple presence and easily approachable
eidal – to attain
eLidenba – it is easy
yArmATTum – with everyone
paNbuDaimai ennum – to live courteously
vazhakku – in such good stead.

Those who have simple presence and are easily approachable by anyone, it is easy for them to have the virtue of courteousness. Being courteous means, to have compassionate heart, higher birth, and tendency to help others; such people are easy to approach and converse with.

“To approach by any, that are simple and easy
 Easy it’s for them to have the virtue of courtesy “


இன்றெனது குறள்:

யார்க்கும் எளியார்க்கு பண்புடைமை என்பது
பார்மீது எய்தல் எளிது.

yArkkum eLiyArkku paNbuDaimai enbadu
pArmIdu eidal eLidu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...