7th
Jan 2015
இன்னாசெய் தார்க்கும் இனியவே
செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
என்ன பயத்ததோ சால்பு.
(குறள் 987:
சான்றாண்மை அதிகாரம்)
இன்னா செய்தார்க்கும் - ஒருவர் தமக்கு கசந்து போகும்படி துன்பமே
செய்தாலும்
இனியவே செய்யாக்கால் - அவருக்கும் கூட இனிமையான நன்மையே செய்யாவிடில்
என்ன பயத்ததோ - என்ன பயனுண்டு ?
என்ன பயத்ததோ - என்ன பயனுண்டு ?
சால்பு - ஒருவருடைய நல்ல பண்புகளினால்
இக்குறளைப்
படிக்கும்போதே பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்னும் பாரதியின் பாடல் நினைவுக்கு
வருகிறது. இக்குறள் வலியுறுத்தும் பண்பின்
உச்சம் கடைபிடிப்பதற்கு அரிய ஒன்று. கடவுள் என்னும் கருப்பொருளைக் காண்பதற்கு இணையானது.
தமக்கு
துன்பமே செய்த ஒருவருக்கும் கூட, இனியவற்றையே நினைத்தலும், செய்தலும் இல்லாவிட்டால்,
ஒருவர் மற்ற மேன்மையான பண்பு நலன்களைக் கொண்டு உயர்ந்திருப்பதால் என்ன பயன், என்று
வினவுகிறார் வள்ளுவர். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து
விடல்” என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.
இது
உலக வழக்கில் யாருமே செய்யாத ஒன்று. குறளைப் படிக்கும்போதே. இன்னா செய்தாரை கோபிக்காமலிருக்கச்
சொல்லவில்லை என்பது புலனாகிறது. ஆயினும் நன்மையே செய்துவிடுதலே சால்பாம். நாலடியார்
பாடல் ஒன்று இவ்வாறு இக்கருத்தையே வலியுறுத்துகிறது.
உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும், உபகாரம்
தாம்செய்வ தல்லால், தவற்றினால்
தீங்கூக்கல்
வான் தோய் குடிப்
பிறந்தார்க்கு இல்.
தாம்
முன்பு உதவி செய்ததை நினையாமல் பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும் அவருக்குத்
தாம் திரும்பவும் உதவி செய்வதல்லாமல், அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்ய
முயலுதல் உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.
அதாவது, தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலுமேலும்
நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர்.
இப்போது பாரதியின் பாடலையும் முழுமையாகப் பார்த்துவிடலாம். அருமையான
பாடல்.
பகைவனுக்கருள்வாய்
நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்
புகை நடுவினில்
தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே
- நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில்
அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான்
- நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்
(பகை)
சிப்பியிலே
நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ?
- நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே
மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ?
- நன்னெஞ்சே
கொடி வளராதோ?
(பகை)
உள்ள நிறைவில்
ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ?
- நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில்
ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின்
தேனாமோ? - நன்னெஞ்சே
சேர்த்த பின்
தேனாமோ? (பகை)
வாழ்வை நினைத்த
பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு
நேராமோ? - நன்னெஞ்சே
வாழ்வுக்கு
நேராமோ?
தாழ்வு பிறர்க்கு
எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ?
- நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ?
(பகை)
போருக்கு வந்து
அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும்
அவன் - நன்னெஞ்சே
போல வந்தானும்
அவன்
நேருக்கு அருச்சுனன்
தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன்
அன்றோ? - நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன்
அன்றோ? (பகை)
தின்ன வரும்
புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில்
போற்றிடுவாய் - நன்னெஞ்சே
சிந்தையில்
போற்றிடுவாய்
அன்னை பராசக்தி
அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய்
- நன்னெஞ்சே
அவளைக்
கும்பிடுவாய் (பகை)
Transliteration:
innAsei dArkkum iniyavE
seyyAkkAl
enna payththadOl sAlbu
innA
seidArkkum – Even if someone has only thought hurt and bad
iniyavE seyyAkkAl – if good coated with sweetness is not
done
enna payththadOl – what goos is it to be a person of
sAlbu – excellent virtues?
Reading
this verse, we are reminded of the poem of BharatiyAr, “pagaivanukkum aruLvAi nannenjE”.
This epitome of vitrtue is hard to practice for anyone – almost equal to
seeing the Godliness in people.
If
a person, of claimed excellence in virtues, cannot think and do only good even
for those intend harm, what good is to have such excellence? We can recall
another verse of vaLLuvar, “innA seidAr
oRuththal avar nANa nannayam seidu viDal”
What
these verses preach is an impossible vritue for anyone. It is also to be noted
that vaLLuvar does not say that we should not show out displeasure or anger to
correct anyone. Despite displeasure or even being angerd, doing good is
imperative for sublimity.
A
nAlaDiyAr verse, also insists the same as a virtue for people of noble birth.
“What
is sublimity in a person, if cannot do only good of sweetness
Even for those that intend only harm and hurt of
vile and meanness”
இன்றெனது
குறள்:
சான்றாண்மை
யென்பதென் துன்பமே செய்தார்க்கும்
ஆன்றநன்மை
செய்யா விடில்?
chAnRANmai yenpaden thunbamE seidArkkum
AnRananmai seyyA viDil?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam