ஜனவரி 05, 2015

குறளின் குரல் - 992

6th Jan 2015

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
                                    (குறள் 986: சான்றாண்மை அதிகாரம்)

சால்பிற்குக் - ஒருவரின் மேன்மைக்கு
கட்டளை - உரைகல் (தங்கத்தை உரைத்து தரம் அறிய உதவும் கல்)
யாதெனின் - என்னவெனில்
தோல்வி - தோல்வியை
துலையல்லார் கண்ணும் - தமக்கு ஈடு இணை இல்லாதவரிடம் அடைந்தாலும்
கொளல் - அதையும் மனம் சுளிக்காமல் ஏற்றுக்கொள்ளல்.

ஒருவரின் மேன்மையின் தரத்தை உரசிப்பார்க்கக்கூடிய உரைகல்லாக இருப்பது என்னவென்றால் தமக்குச் சற்றும் ஈடென்றும், இணையென்றும் சொல்லத் தகாதவர்களிடம் தோற்றாலும் அதையும் முகஞ்சுளிக்காமல் ஏற்றுக்கொள்ளும் தன்மையாம். பலருக்கும் தம்மில் வலியாரிடமும், திறமை மிக்கவரிடமும் தோற்றாலே அத்தோல்வியை ஏற்றல் என்பது கடினம். தம்மினும் கீழோரிடம் தோற்பது என்றால் அதை தாங்கிக்கொள்ளவே முடியாது. அவ்வாறு நேர்ந்தாலும் அதையும் சம நோக்குடன் கொள்வது மேன்மையான குணம் உள்ளவர்களுக்கே நடக்கக் கூடியது. அதனாலேயே வள்ளுவரும் அதை சிறப்பாக இங்கு பாடுகிறார்.

Transliteration:

sAlbiRkkuk kaTTaLai yAdenin tOlvi
thulaiyallAr kaNNum koLal

sAlbiRkkuk – For sublimity or excellence
kaTTaLai – the touchstone to test its upholding
yAdenin – what it would be is
tOlvi – defeat
thulaiyallAr kaNNum – even if faced from inferior
koLal – take it with equanimity

The touchstone to assess the persons’ excellence is how composed and equanimous he is at the face of defeat from inferior.  Even if defeated by mighty and more capable for most, it is the most difficult situation, to take the defeat as deserved or with a sense of levelheadedness.

To face it from persons inferior would be impossible for most people. Only people of highly elevated maturity and sublime nature can handle it with equipoise. Hence vaLLuvar speaks about in particular in this verse.

“The touch tone of true excellence is to treat
 With equanimity, even from inferior, a defeat”


இன்றெனது குறள்:

ஒப்பிலார் மாட்டுவரும் தோல்வியும் ஏற்பதே
ஒப்பிலாமேன் மைக்குரை கல்

oppilAr mATTuvarum thOlviyum ErpadE
oppilAmEn maikkurai kal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...