5th
Jan 2015
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
மாற்றாரை மாற்றும் படை.
(குறள் 985:
சான்றாண்மை அதிகாரம்)
ஆற்றுவார் - செயலாக்கம் கொண்டோர்க்கு
ஆற்றல் - இன்றியமையாத் திறனாவது
பணிதல் - பணிவாம்
அது சான்றோர் - அப்பணிவே சான்றோர்
மாற்றாரை - தம்முடைய பகைவரை
மாற்றாரை - தம்முடைய பகைவரை
மாற்றும் - மாற்றுவதற்கு பயனாக்கிக்கொள்ளும்
படை - ஆயுதமுமாம்
செயலாக்கம்
உடையோர்க்கு இன்றியமையாத பண்பு நலன்களில் ஒன்று பணிவாம். அதுவே தமக்கு இணையானவரோடும்,
தம்மைவிட உயர்ந்திருப்போரோடும் ஒத்து வேலை செய்வதற்கான வழிமுறையாம். அப்பணிவே மேன்மையான
பண்பு நலம் உடையவர்கள் தம் பகைவரைக்கூட மாற்றுவதற்காக மேற்கொள்ளும் யுக்தியுமாம்.
Transliteration:
ARRuvAr ARRal paNidal
adusAnROr
mARRArai mARRum paDai
ARRuvAr – those who are capable of getting any
undertaking done successfully
ARRal – have this important ingredient of
capability
paNidal – that is submission
adu sAnROr- that very tool is for the people of
sublimity
mARRArai – used against their enemies
mARRum – to change them
paDai – the instrument or the weapon.
Those
that have an important ingredient of submission are capable of getting any
undertaking done successfully and expediently. It is required to get things
done especially when working with people of similar or higher stature. People
of submility use the same their weapon to change their enemies. More than a
weapon, it is an instrument in their hands to accomplish the change in the
enemies.
“Men of mighty
accomplishments have submission as their tool
So are sublimate souls,
use the same to change the foes’ pool”
இன்றெனது
குறள்:
செய்வோர்
திறன்பணிவே சான்றோர் பகையினைப்
பொய்யாக்கக்
கொள்ளுமாயு தம்
seyvOr thiRanpaNivE sAnROr pagaiyinaip
poyyAkkak koLLumAyu dam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam