ஜனவரி 03, 2015

குறளின் குரல் - 990

4th Jan 2015

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
                                    (குறள் 984: சான்றாண்மை அதிகாரம்)

கொல்லா நலத்தது - தம்முடைய நலத்துக்காக ஓருயிரையும் கொல்லாமலிருப்பதே
நோன்மை - தவமாம்
பிறர்தீமை - பிறரிடம் குற்றங்குறைகளை மட்டும் கண்டு
சொல்லா நலத்தது - அவற்றைச் சொல்லாத பண்பு
சால்பு - மேன்மையாகும்

தவம் என்பது ஓருயிரையும் கொல்லாத அறவாழ்க்கையாகும். அதே போன்று ஒருவருடைய மேன்மையாவது மற்றவருடைய குறைகளைப் பேசாமலிருப்பதாகும். கொல்லாமை மேற்கொண் டொழுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று’ என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். கொன்றை வேந்தனில், “ நோன்பென்பது கொன்று தின்னாமை” என்பார் ஔவையார்.

Transliteration:

kollA nalaththadu nOnmai piRarthImai
sollA nalaththadu sAlbu

kollA nalaththadu – for nourishing self not killing another life is
nOnmai – is penance
piRarthImai – finding faults and blemishes (even the minor ones)
sollA nalaththadu – and not ill-speak others is
sAlbu – true sublimity

True penance is not killin another life for own nourishment and sustenance. Likewise, true sublimity is not speaking ill of others finding only faults and blemishes in others. In another verse earlier vaLLuvar has said even the lord of death would not go near the person who pratices “not killing for sustenance” as a virtue. AuvayyAr also stresses the same in her work of “konRai vEndan”.

“Not killing for lifes’ sustenance is true penance
 Not ill-speaking of others is sublimity-excellence”


இன்றெனது குறள்:

தவமென்ப தோருயிர் கொல்லாமை சால்பு
அவம்பிறர்மேல் காணா இயல்பு

thavamenba dOruyir kollAmai sAlbu
avampiRarmEl kANA iyalbu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...