ஜனவரி 30, 2015

குறளின் குரல் - 1016

30th Jan 2015

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
                                    (குறள் 1010: நன்றியில்செல்வம் அதிகாரம்)

சீருடைச் செல்வர் - புகழ் பெற்ற செல்வத்தினை உடையவர்கள்
சிறு துனி - சிறிதளவு வெறுப்புற்று ஈயாதொழியினும்
மாரி  - மழை தரும் மேகமானது
வறங் கூர்ந்தனையது உடைத்து - நீரற்று வறண்டார்போல் பெய்யாமைக்கு ஒப்பாகும்

நீருண்டமேகம், தன் கொடையாகிய மழையைப் பெய்யாது பொய்க்குமானால், மேகத்தால் ஒரு பயனும் இல்லை. அதேபோன்று, பெருஞ்செல்வத்தினை உடையவர்கள் ஈவதற்கு சிறிதளவே வெறுப்புற்றாலும், அவர்கள் செல்வம் நன்மை பயவாத செல்வமேயாகும். 

சாலமன் பாப்பையா அவர்களின் உரைவழி நின்று பொருள் கொண்டால், செல்வர்க்கு சிறிது காலமே வறுமை ஏற்பட்டாலும், அது மேகமானது நீர் வற்றியது போலாம், என்றாகிறது.

இக்குறளுக்கான பரிமேலழகர் உரை, மூலக் குறளை விடவும் விளங்கக்கடினமாக உள்ளது.

“துனி” என்ற சொல்லுக்கு வறுமை என்றும், வெறுப்பு என்றும் பொருள் இருப்பதால் எதைக் கொள்வதென்ற குழப்பம் வரும்; புகழ்மிக்க செல்வத்தினை உடையவர்க்கு சிறு வறுமை வருவது எப்படி அவர்கள் ஈகையை பாதிக்கும் என்பது தெளிவாகவில்லை. நீர்முகந்த மேகமும் உண்டு, நீரற்ற மேகமும் உண்டு. நீர்முகந்த மேகம் நின்று பொழியும், காற்றினால் எளிதில் கலைக்கப்படாது. நீரற்ற மேகம் என்பது வலுவற்றது,  வற்றியது, காற்றால் அடித்துச் செல்லப்படுவது, அது பொழிவதில்லை. நீர்முகந்த மேகத்தில் சிறிது குன்றினாலும், மழை பொழிவதுண்டு. நீரற்ற மேகம் ஏற்கனவே வற்றியதுதானே, மழையும் பொழியாததுதானே!

சாலமன் பாப்பையா அவர்களின் உரை தெளிவாக உள்ளது. ஆனால் அது எவ்வாறு நன்மையில்லாத செல்வமென்னும் அதிகாரத்துக்குப் பொருந்துகிறது என்பதில் தெளிவில்லை.

Transliteration:

sIruDaich selvar siRuthuni mAri
vaRngkUrn danaiyadu uDaiththu
sIruDaich selvar – That who possess glorious wealth
siRuthuni – even his little aversion (to the act of benovelence )
mAri – the clouds that bring rain
vaRngkUrn danaiyadu uDaiththu – as if dried and won’t rain

The pregnant clouds, if fail to pour, are of no use; Likewise, people of glorious wealth, even if they are a little averse to the act of benevolence, their wealth is of no useful purpose. Parimelazhagars’ commentary is confusing more than the verse itself. The word “Thuni” means both hatred and poverty.

If we go with Salomon Pappayyas’ commentary, if the benovlent wealthy becomes poor even for a short while, then it would be like clouds depleted of rains. It is not clear as how being poor a little would affect somebody being charitable.  Also the comparison cloud is rather cloudy. The pregnant clouds have the standing power to pour; only lighter clouds will float and fail to give their bounty. Comparison itself is confusing.

Prof. Pappayyas’ commentary is very clear, but does not fit with the chapter heading.

“It is like pregnant clouds fail to give their gift of rains
 When wealthy with abhorrence not share their gains”


இன்றெனது குறள்:

தண்மேகம் தான்பொழியாத் தவ்வுதல்போல் சீர்செல்வர்
ஒண்பொருளை ஈயவெறுத் தல்

thaNmegam thAnpoziyAth thavvudalpOl sIrselvar
ONporuLai IyaverRuth thal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...