ஜனவரி 29, 2015

குறளின் குரல் - 1015

29th Jan 2015

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
                                    (குறள் 1009: நன்றியில்செல்வம் அதிகாரம்)

அன்பொரீஇத் - யாரிடத்திலும் அன்பிலாது ஒழிந்து
தற்செற்று - தன்னையும் வருத்திக்கொண்டு
அறநோக்காது - அறவழி ஈதென்று பாராதான்
ஈட்டிய ஒண்பொருள் - சம்பாதித்த மேன்மையான செல்வத்தினை
கொள்வார் பிறர் - யாரோ தகுதியில்லாத பிறரே கொள்வர் (தீயோர் என்று உய்த்துணரவேண்டும்)

பிறரிடம் அன்போடு இருந்துவிட்டால் தன்னுடைய செல்வத்தைக் கொண்டு ஏதேனும் செய்ய வேண்டியிருக்குமே என்று அஞ்சி, அதை அறவே தவிர்த்து, செல்வம் குன்றாதிருக்க தனக்காகவும் செலவழித்துக் கொள்ளாது, அதன் காரணமாக தம்மையும் வறுத்திக்கொண்டு,  வறியவர்க்கு ஈதலே அறமென்பதையும் பாராது இருப்போனுடைய ஈட்டிய பெரும் பொருளை, அவனுக்குப் பிறகு யாரோ கொண்டு போகப் போகிறார். மீண்டும் ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பதை நினைவு கொள்ளவேண்டும்.

இக்குறளின் கருத்து முந்தைய குறளின் கருத்துக்கு மாறுபட்டு இருக்கிறது. விரும்பப்படாதவன் செல்வமானது நச்சுமரத்தின் பழம் போன்றது என்றார். இக்குறளின் சொல்லியிருப்பவரையும் ஒருவரும் விரும்ப மாட்டரே! அப்போது அவருடைய செல்வத்தை யாரே கொள்வர்?

சென்ற குறளின் கருத்திலே ஒரு திருத்தம் வேண்டும். நல்லவர், அல்லது நற்செயல்களுக்கு எவரும் அத்தகைய செல்வத்தை “நச்ச” மாட்டார் என்பதே உண்மை. நாலடியார் பாடலொன்று கூறுவதைப் போல் யாரோ பயன்கொள்வர், நாலடியார் பாடலின் எடுத்துக்காட்டு பொருந்தாத ஒன்றாக இருந்தாலும்.

“கொடுத்தலும், துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ் செல்வம், இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போல, பருவத்தால்,
ஏதிலான் துய்க்கப்படும்.”

Transliteration:

anborIith thaRseRRu aRanOKKAdu ITTiya
oNporuL koLvAr piRar

anborIith – Not being compassionate to anyone
thaRseRRu – self denying the comforts of own wealth
aRanOKKAdu – not seeking the virtuous ways to spend the wealth
ITTiya oNporuL – wealth so earned
koLvAr piRar – will only be taken by others

Not showing compassion to others, for the fear of having to spend even a little bit of his earned wealth on them, not even spending on self for the fear of depleting the heap even a little bit, and thus denying pleasures to self and not even seeking virtuous ways of spending on poor and “have-nots”, all such earnings will only be taken by others, perhaps by totally undeserving bad elements of the society.

What is conveyed in this verse is contrary to the earlier verse, where vaLLuvar said, wealth of a person who is not liked by anyone, is like the fruits of a poisonous tree. After all none will like a person identified in this verse also and why would anybody touch his wealth? But the truth is the previous verse needs to be a little amended. That metaphor was nice, but did not go with the reality. The reality is that such wealth would be looted by bad elements after all.

A nAlaDiyAr verse says the same as this verse. It uses a totally meaningless metaphor, though.

“Wealth earned by anyone without compassion, self-denying of pleasures
 And is devoid of virtuous ways, will be taken totally by underserving others”

இன்றெனது குறள்:


அன்பொழிந்து தான்வருந்தி மற்றறமும் பாராதான்
தன்னீட்டம் கொள்வர்தீ யோர்

anbozhindu thAnvarundi maRRaRamum pArAdAn
thannITTam koLvarthI yOr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...