28th
Jan 2015
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
(குறள் 1008:
நன்றியில்செல்வம் அதிகாரம்)
நச்சப்படாதவன் செல்வம்
- யாராலும் விரும்பப்படாதவனது
செல்வமானது.
நடுவூருள் - ஊரின் நடுவே
நச்சு மரம் - விட விருட்சம்
பழுத்தற்று - காய்த்து, பழங்களைக் கொண்டது போலாம்.
ஊரிலே யாராலும்
விரும்பப்படாத ஒருவனுடைய (எல்லோராலும் வெறுக்கப்படுபவனது) செல்வம் ஊரின் நடுவே பொதுவாக உள்ள நச்சு
மரமானது பூத்து, காய்த்து பழங்களோடு விளங்குவது போலாம். மரம் பொதுச் சொத்தாக இருந்தாலும்,
அப்பழங்களை யாரோ விரும்பி எடுத்துக்கொள்வர்?
அதேபோல் யாரலும் விரும்பப்படாதவன் பெற்ற செல்வமும்; யாரும் அவனை உதவி கேட்டுகூட
அண்டமாட்டார்.
Transliteration:
Nachchap paDadavan selvam naDuvUruL
Nachchu marampazhuth thaRRu
NachchappaDadavan selvam – A person that is hated by everyone
(not liked by anybody)
naDuvUruL –In the middle of the town
Nachchu maram – a poisonous tree
pazhuththaRRu – fruits a plenty
A person
that is not liked by anybody in a town, is like a posinous tree in the middle
of the town that fruits. Who would desire those fruits? None. Likewise, none will desire to seek any help
from such miser despite his enormous wealth.
“Like a poisonous tree that fruits in
the middle of the town,
A
person unliked by all, no help be sought from, by anyone”
இன்றெனது
குறள்:
ஊர்நடுவில்
நச்சுமரம் காய்த்துபழுத் தாற்போலாம்
யார்க்குமே
வேண்டான்செல் வம்
UrnaDuvil nachchumaram kAiththupazhuth
thARpOlAm
yArkkumE vENDansel vam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam