ஜனவரி 27, 2015

குறளின் குரல் - 1013

27th Jan 2015

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
                                    (குறள் 1007: நன்றியில்செல்வம் அதிகாரம்)

அற்றார்க்கு - செல்வமில்லா வறியோர்க்கு
ஒன்று ஆற்றாதான் - தம்மிடம் உள்ள செல்வத்தால் உதவி புரியாதவனுடைய
செல்வம் - செல்வமானது
மிகநலம் பெற்றாள் - மிகுந்த அழகும், வனப்பும், இளமையும் உடையவள்
தமியள் - தனியாக இருந்து (இல்லறத்தில் ஈடுபடாமல் இருந்து)
மூத்தற்று - முதுமை அடைந்தார்போலாம் (பயனிலா இளமையாய் கழிந்ததுபோலாம்)

பெண்ணின் இளமையும், அழகும் இல்லறமாகிய நல்லறத்தில் ஈடுபடாமல் பருவம் கழிந்து முதுமையடைந்து, வீணாவதுபோலாம். இல்லாதோர்க்கு, ஈந்து உதவாதவனுடைய செல்வம்போலாம். செல்வத்துக்கு முதுமையில்லைதான்; பயனில்லாது வீணாகக் கழிவதென்பது ஈந்து அதனால் மறுமைக்குத் தேவையான புண்ணியத்தைத் தேடிக்கொள்ளாதிருப்பது என்றே கொள்ளவேண்டும்.

Transliteration:

aRRArkkonRu ARRAdAn selvam miganalam
peRRAL tamiyaLmUth thaRRu

aRRArkku – for those who have not
onRu ARRAdAn – not helping with the wealth he has
selvam – that wealth is like
miganalam peRRAL – the beauty and the youth of a young woman
tamiyaL – living alone (without being married and leading a nice family life)
mUththaRRu – becoming old.

Like how a young maidens’ beauty, and youth are wasted to grow old without the blisss of leading family life, is the wealth of a someone who does not share or help the needy; As we have seen in many verses earlier without being charitable, the merit of being born in noble and virtuous families will not be there; having the wealth without knowing the joy of giving to others is indeed a wasted life.

“The rich with all his wealth being not charitable where needed
 is wasted like young maidens’ youth, beauty not being married”


இன்றெனது குறள்:

இல்லார்க்கு ஈயாதான் செல்வம் தனித்திருந்து
நல்லிளமை பெண்தொலைத்தாற் போல்

illArku iyAdAn selvam thaniththirundu
nalliLamai peNtholaiththAR pOl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...