98: (Greatness/Pride- பெருமை)
[By doing what is impossible to do, not self-consumed, bragging,
nor finding fault with others are all the good traits of people of virtuous
character, a person attaining greatness and holds pride for his stature. These
traits place a person in high status too.
22nd
Dec 2014
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
(குறள் 971:
பெருமை அதிகாரம்)
ஒளி ஒருவற்கு - புகழ் என்பது ஒருவற்கு
உள்ள வெறுக்கை - உள்ளத்தில் மிக்கிருத்தல் (எது? ஊக்கம்
என்பது உள்ளுறை)
இளி ஒருவற்கு - இகழ் என்பது ஒருவற்கு
அஃதிறந்து - அவ்வூக்கமிகல் அற்றழிந்து
வாழ்தும் எனல் - வாழ்ந்தோம் என்று பெயருக்கு வாழ்தல்
உள்ளத்தில்
ஊக்கமுடையவராயிருத்தல் ஒருவற்குப் பெருமையாம் புகழைத் தருவதாம். அவ்வூக்கம் இல்லாது
அற்று அழியுமானால், அவருக்கு இழிவும், தாழ்வும் வந்துறும், என்கிறது இக்குறள். பெருமை
பெறுவதற்கு முதலாயதானது என்று கூறி இவ்வத்தியாயத்தைத் துவக்குகிறார் வள்ளுவர்.
Transliteration:
oLi oruvaRku uLLa veRukkai iLioruvaRku
ahdiRandu vAzdum enal
oLi oruvaRku – pride or greatness for someone is
uLLa veRukkai – being resolved at heart with energy to
accomplish
iLi oruvaRku – disgrace for someone is
ahdiRandu – being devoid of such drive to
accomplish
vAzdum enal – and thinking it is OK to live as such
Having
the drive at heart to accomplish is the way to greatness for anyone. Being
devoid of that one shall only get disgrace, says this verse. Thus to achieve
greatness or pride, the prime factor is having the internal resolve to
accomplish.
“Pride or greatness is having the drive
at heart to accomplish
Disgrace or devoid of glory is due to
sloppiness that demolish”
இன்றெனது
குறள்:
ஊக்கமே யார்க்கும்
பெருமை தருவதாம்
ஊக்கமின்மை
தாழ்வாம் இளி
UkkamE yArkkum perumai tharuvadAm
Ukkaminmai thAzhvAm iLi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam