23rd
Dec 2014
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
(குறள் 972:
பெருமை அதிகாரம்)
பிறப்பு ஒக்கும் - இயல்பு என்பது பிறப்பால் ஒன்றுதான்
எல்லா உயிர்க்கும் - யாவர்க்கும்
சிறப்பு ஒவ்வா - பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது
செய்தொழில் - அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள
வேற்றுமையான் - வேற்றுமைகளால்
பிறப்பாலே யாவரும் நல்லவர் என்றோ தீயவர் என்றோ இல்லை. ஒருவர்
உயர்குடிப் பிறக்கலாம், தாழ்ந்த குலத்திலேயும் பிறந்திருக்கலாம். அவற்றால் அவரவர்க்குக்
கிடைக்கும் வாய்ப்புகளும் வேறுபடலாம். ஆயினும் அவரவர் தம் தொழில்களிலே காட்டுகிற திறமை,
இன்மை இவற்றைப் பொருத்தே ஒருவருக்குப் பெருமை என்பது சேரும்.
மேட்டுக்குடி பிறப்பாளராக இருந்து, அதன் காரணமாகவே அரிய
வாய்ப்பினைப் பெற்றும், ஆற்றாது சிறுமை படுபவர்களும் உண்டு. அதேபோல் கீழ் குடிப்பிறப்பினராக
பிறந்து, அவருடைய கற்கும் வாய்ப்பு, தொழில் வாய்ப்பு போன்ற சூழ் நிலைகளால், சமுதாயத்தின்
கடை நிலை வேலைகளைச் செய்தாலும், அவற்றிலும், தொழில் நேர்மை, நேர்த்தி, உழைப்பு இவற்றால்
பெரும் பெருமைப் பெறுபவர்களும் உள்ளார்கள்
கம்பராமாயணத்தில் வாலிவதைப் படல பாடல் வரிகள் இக்குறளின்
கருத்தையே கூறுகின்றன.
“இனையதாதலின்
எக்குலத்து யாவர்க்கும் வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்”
இக்குறளின் கருத்து ஔவையாரின்
“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே” என்ற கூற்றோடு ஒப்பவில்லை. தவிரவும் விஞ்ஞான
வளர்ச்சியிலே மரபணுக்கள் ஒருவருடை குணக்கூறுகளை ஓரளவுக்கு சங்கிலித்தொடராக தொடர்வதையும்
உறுதி செய்கின்றன. அதனால் பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்பது முழுவதுமாக ஒப்புக்கொள்ளக்கூடிய
கருத்தில்லைதான். அதைத் தள்ளிவிட்டுப் பார்த்தாலும்,
செய்தொழிலில் ஆற்றும் சிறப்பால் ஒருவருக்குப் பெருமை வருவது உறுதியே.
Transliteration:
piRappokkum
ellA uyirkkum siRappovvA
seithozhil
vERRumai yAn
piRapp(u)
okkum – By birth nature is same.
ellA
uyirkkum – for everyone
siRapp(u)
ovvA – but glory, greatness is not the same for everyone
seithozhil –
by the work they do, of what they get to do
vERRumaiyAn –
and the differences in them.
By birth everybodys’ nature is the same none can be
branded as good or bad. Regardless of family status one born into, and the
opportunities one is bestowed with, depending how they fulfill their duties
well or not, the greatness or glory will be theirs.
A person might be born in to aristocracy, and hence
blessed with rare opportunities, but would peform poorly in his duties and
miserably fail too. Likewise, a person born into a family of lowly status,
because of lack of opportunities to learn, and hence lack of key opportunities,
may do only menial jobs, but still could deliver exemplary results, thus
earning glory, greatness.
This is what is conveyed by the verse.
There are contrarian views to the first part of this
verse, expressed by Auvayyar, in a poem, where she says, “keTTAlum mEnmakkaL
mEnmakkaLE”. Also, the scientific advancements indicate that DNA carries the
traits of the person passed from generation to generation and hence defy the
theory that all are equal by birth in all counts. However it is indeed true
that based on how someone excels in his undertakings, his glory is!
“Though
by birth all lives are of the same, equal nature
Only occupational excellence brings glory and
stature”
இன்றெனது
குறள்:
இயல்பொப்பர்
யாரும் பிறப்பில் பெருமை
வயப்படலோ
செய்தொழிலா லே
iyalboppar yArum piRappil perumai
vayappaDalO seythozhilA lE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam