டிசம்பர் 20, 2014

குறளின் குரல் - 976

21st Dec 2014

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
                                    (குறள் 970: மானம் அதிகாரம்)

இளி வரின் - தமக்கு தாம் அறியாது செய்துவிட்ட ஒன்றால் இகழ்ச்சி வருமாயின்
வாழாத - வாழாமல், உயிர் துறக்குமளவுக்கு
மானம் உடையார் - மானக்கேட்டுக்கு அஞ்சுவோர், மானத்தினை கொண்டோர்
ஒளிதொழுது - அவருடைய புகழைப் பாடி
ஏத்தும் உலகு - அவரை உயர்த்தும் உலகம்.

தாம் அறியாது செய்துவிட்ட ஒர் செயலாலும், தமக்கு இழிவு தரக்கூடிய இகழ்ச்சி வருமாயின், தம்முயிரையும் துறக்குமளவுக்கு, மானக்கேட்டுக்கு அஞ்சுகிற, மானத்தையே உயிரெனப் போற்றுகின்றோருடைய புகழை இவ்வுலகம் என்றும் பாடும், போற்றும்.

சான்றோர் தம் மானத்துக்கு ஈனம் வருமாயின் உயிரோடு வாழார் என்ற சென்ற குறளில் கூறியதை பல நீதி நூற்பாடல்களும் சொல்லியுள்ளன

உள்ளங் குறைபட வாழார் உரவோர் (நான்மணிக் கடிகை)
மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே (இனியவை நாற்பது)

அவ்வாறு மாகனக்கேட்டுக்கு அஞ்சி உயிர் நீக்கும் தன்மையாளரை, உலகே புகழ்ந்து ஏத்தும்!

Transliteration:

iLivarin vAzhAda mAnam uDaiyAr
oLithozhudu Eththum ulagu

iLi varin – If shame befalls
vAzhAda – will sacrifice the life
mAnam uDaiyAr – those who fear losing honor, care for faultless dignity
oLi thozhudu – glorifying their praise
Eththum ulagu – the world will sing their praise


Even if unknowingly indulged in shameful that brings blameful, people of utmost dignity  will relinquish their life; Glory of such honorable souls will be sung by the world.

Those that care for dignity shall not live if disgrace befalls on them; and such people are praise worthy is the central thought of this verse.

“World sings the glory of the dignified that’re honorable
 live no if disgrace befalls even for deeds unintentional”

இன்றெனது குறள்:

இழிவுற மானமஞ்சி இன்னுயிர் நீங்கும்
கழிபுகழைப் போற்றும் உலகு

izhivuRa mAnamanji innuyir nIngum
kazhipugazhaip pORRum ulagu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...