டிசம்பர் 19, 2014

குறளின் குரல் - 975

20th Dec 2014

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
                                    (குறள் 969: மானம் அதிகாரம்)

மயிர் நீப்பின் - தம்முடைய உரோமத்தில் ஒன்றை இழந்தால் கூட
வாழாக் - தாம் உயிர் வாழாத
கவரிமா அன்னார் - கவரிமான் போன்றோர்
உயிர்நீப்பர் - தம்முடைய இன்னுயிரை நீத்துவிடுவர்
மானம் வரின் - தம்முடைய மானத்துக்குக் கேடானவை நேர்ந்துவிடுமாயின்

இக்குறளின் படிமம் எடுத்தலில் ஏதேகனும் தவறு நிகழ்ந்திருக்கலாமோ என்று ஐயுற வேண்டியுள்ளது. இயற்கை நிகழ்வுகளான மயிர் உதிர்தல், எல்லா மயிருள்ள உயிரினங்களுக்கும் உள்ளதே. இதனால் ஒரு உயிரும் பிரிவதில்லை. தவிரவும் உயிரை மயிருக்கு சமமாக வள்ளுவர் கூறியிருப்பார் என்பதும் பொருத்தமாக இல்லை.

கவரி என்பது வீசும் சாமரையை குறிப்பதாகக் கொண்டால், அது மயிருக்குச் சமமாகச் கருதப்படும் மெல்லிய இழைநார்களால் ஆனது. அது உதிர்ந்து மெலிதானாலோ, அல்லது மொத்தமாக உதிர்ந்துவிட்டாலோ, அதற்கு மாண்புடையோருக்கு வீசப்படும் மாண்பை இழக்கிறது. அதன் வாழ்வும் அத்தோடு முடிகிறது. மானத்துக்கு இழப்பு நேருமாயின் மானமென்னும் மாண்பைப் பெரிதெனக் கருதும் பெரியோர் தாம் உயிரோடு இருத்தலை விரும்பாது நீங்குவர் என்றே இக்குறள் கூறுவதாகக் கொள்ளவேண்டும். கவரி என்பதது பெரியோருக்கே வீசப்படுதலால், அதற்கு மாண் என்று ஏற்றிச் சொல்லியிருக்கலாம். “கவரிமா” என்பதைவிட “கவரிமாண்” என்பதே பொருந்துகிறது.

உதிர்ந்த பிறகே மயிருக்கு மாண்பில்லை. அது தலையில் இருக்கும் போது அது மாண் உடையதாகவும், அழகின் சின்னமாகவும் கருதப்படுகிறது. மகாபாரத்தில் அந்தணனான அசுவத்தாமனுக்கும், அரசகுமாரனான ருக்மிக்கும் (ருக்மணியின் சகோதரன்), இத்தகைய சிகை மழிப்பு மாண்பினைக் குலைப்பதன் குறியீடாகச் செய்யப்பட்டதை நினைவு கூறவேண்டும். கவனிக்கவேண்டிய ஒன்று என்னவெனில், இரண்டு சிகை மழிப்புகளுக்குமே கண்ணனே காரணமாய் இருந்திருக்கிறான்.  முடியறுத்தல் மணிமுடியை அறுத்தலுக்குச் சமமானதால், அதை இழப்பதை உயிரிழப்பதற்குச் சமமாகக் கூறியதாகவும் கொள்ளலாம்.

எல்லோரும் அறிந்த மானக்கேடு, ஒருவருக்குக் சிகையை முழுவதுமாக மழித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதுதான். எனவே தொன்று தொட்டு வரும் ஓர் அடையாளக் குறியீடாகக் கொள்ளலாம்.

இப்போது குறளின் பொருளைப் பார்த்தால், உரோம இழைகளை நீங்கிய கவரியானது, மாண்புடையோர்க்கு வீசப்படும் மாண்பை இழந்து வாழாமல் போகிறது. அதேபோன்றே மானம் உள்ளோரும் அதை இழக்க நேரிடின் வாழாப் பிணங்களுக்குச் சமானமாவர் அன்றி உயிரை நீக்கிக்கொள்வர் என்று கொள்ளவேண்டும்.

கவரிமான் என்றோ, கவரிமா என்றோ வரும் இலக்கிய எடுத்துக்காட்டுகள் எல்லாம், வள்ளுவர் காலத்துக்குப் பின் வந்தவை ஆதலால், அவையெல்லாம் படிமக்கோளாற்றினை ஒட்டியே எழுதப்பட்டிருக்கலாம்.

Transliteration:

mayirnIppin vAzhAk kavarimA annAr
uyirinIppAr mAnam varin

mayir nIppin – even a strand of hair is lost
vAzhAk – will not live
kavarimA annAr – people like a type of dear knowns as “kavari mAn”
uyiri nIppAr – they will not live (commit what is equivalent of hara-kiri in Japan)
mAnam varin – if there their honor or dignity is lost

There must have been some mistake while copying this verse from palm leaves over the centuries. Hair drops are common occurences for any biological system that has hair growth. No biological being with hair will lose its live over such trivial occurrence.

Kavari is “Yak-tail”, fan, used for fanning idols and great personages; made of hair in yak-tail or plant fibers; If strands are lost in that and it becomes slip or completely useless, it loses the honor of being the fan as mentioned above and hence its useful life. Such honor, when lost, people of dignity shall also become as useless as dead. It may only be a metaphorical death, not a real one.

The word could be “kavari mAN” instead of “kavari-mA”.  Also, unlike how it has been interpreted, it does not denote a deer; it denotes a tibetian yak.

Only when the hair falls, it loses its glory; As long as it is up on the head, it is considered glorious and a symbol of beauty. We can recall how the glory was reduced to Rukmi (brother of Rukmani) and AswaththAmA by shaving their head off, instigated by Krishna. This was given as a symbolic punishment equal ot death.

Another tradition known to us all is to shave the head off and decorate with black and red dots, when someone commits a crime in villages.

When we look at the meaning of the verse holistically now, the fan that is used for fannin iodls and great persons, loses it use and is considere lifeless when it loses it strands. Such is the state of honorable onles when they lose dignity, even once.

The literary comparisons of later day literature have all lived with the same wrong imagery as most interpreters.

 “Wont live even if a strand of hair is lost, a type of deer
 So are people of reverence, won’t live if they lose honor”

“Losing the strands of fiber, a yak-fan is lifeless
 Such is losing dignity for some, life is meaningless


இன்றெனது குறள்:

பயனில் கவரிநார் அற்றார்போல் மானம்
வயமிழந்தோர் வாழார் உயிர்த்து

payanil kavarinAr aRRArpOl mAnam
vayamizhandOr vAzAr uyirththu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...