டிசம்பர் 11, 2014

குறளின் குரல் - 967

97: (Honour- மானம்)

[Having devoted a chapter on nobility, vaLLuvar further explores the traits that define nobility in detail in subsequent chapters. The first among them is honour, which has been cherished along with the valor and love as the three important aspects of Tamil life. Honour means, “never to go down in others esteems by words and deeds; if honour is affected and lost for any reason, not living keep the nobility in stance and stead is true honour befitting nobility.]

12th Dec 2014

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
                                    (குறள் 961: மானம் அதிகாரம்)

இன்றி - இஃது செய்யாமல்
அமையாச் - வாராது
சிறப்பின ஆயினும் - சிறப்பு எனும் படியாக செயல்கள் இருந்தாலும்
குன்ற வருப - மானக்குறைவானச் செயல்களை
விடல் - ஒருவர் செய்யாது விட்டொழிக்க வேண்டும்

ஒரு செயலைச் செய்வதால் மட்டுமே சிறப்பாய வளங்களும், பேரும், புகழும் கிடைக்குமென்றாலும், அது மானக்கேட்டினைத் தருவதாயின், குறையச் செய்வதாயின், அதைச் செய்யாது ஒழிக்கவேண்டும் என்கிறது இக்குறள்.

தமிழர் வாழ்வோடு இயைந்த காதல், மானம், வீரம் இவற்றுள் மானமே ஒருவரை சமூகத்தில் உயர்ந்தோராகக் காட்டுவது. இதைப்பற்றிப் பாடாத இலக்கியங்களே இல்லை எனலாம்.

புலியானது பசியால் உயிர் வருந்துவதாயினும் இடப்பக்கத்தில் வீழ்ந்த விலங்கினை உண்ணாமையும், வலப்பக்கத்தே வீழ்த்தி உண்ணுதலும் ஆகிய இயல்பினையுடைய தென்பது 1'கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென; அன்றவண் உண்ணாதாகி வழிநாள்,..இருங்களிற்றொருத்தல் நல்வலம் படுக்கும், புலிபசித்தன்ன’ என்ற புறநானூற்றுச் சித்திரத்தால் புலனாகும். ஐந்தறிவினதாகிய புலிக்கே மானம் உண்டென்பதைச் சொன்னதும் தமிழ். அகநானூற்றுப் பாடலொன்றும் இதே கருத்தை “தொடங்கு வினைதவிரா அசைவில் நோன்றாள், கிடந்துயிர் மறுகுவதாயினும் இடம்படின், வீழ்களிறு மிசையாப் புலியினும்’ என்கிறது.

ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை யவர்.

யானையின் புள்ளிகளையுடைய முகத்தைப் புண்படுத்தவல்ல கூரிய நகங்கள் பொருந்திய வலிய கால்களையுடைய சிங்கத்தைப் போன்ற முயற்சி வலிமை யுடையோர் நிலை குறைவாகி வீட்டில் அலுவலில்லாது தங்கி வருவாயின்றி இறக்க நேரினும், குற்றம் உண்டாகக்கூடிய செயல்களைச் செய்வார்களோ? செய்யார், என்கிறது சிங்கத்தின் மானத்தை மேற்கோளாகக் காட்டும் மேற்கண்ட நாலடியார் பாடல்

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; -இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்,
மானம் மழுங்க வரின்

மதம் பொருந்திய யானையை அதன் வலி தொலைத்து வீழ்த்திய காட்டிலுறையும் புலி, தனக்கு இடப்பக்கம் வீழ்ந்த அந்த யானையை, தான் பசி மிகுதியால் உயிர்துறக்குந் தறுவாயிலிருப்பினும், உண்ணாமல் உயிர்விடும்;

Transliteration:

inRi amaiyAch chiRappina Ayinum
kunRa varuba viDal

inRi – not doing ( this )
amaiyAch – will not be there
chiRappina Ayinum – deeds that bring excellence in wealth, fame, etc,.
kunRa varuba – if they beget the honour to diminish
viDal – never indulge in them

By doing something, though there may be glory of wealth and fame, if it is going to be come by diminishing the honour, it is not worth doing and shall be desisted, says this verse.

Among the three tenets of Tamil culture, viz., love, honour and valor, honour is the one that shows a person high and elevated in the society. Most Tamil literary works speak of it as something to be guarded at any and all cost.

The example of tiger not eating the animal it killed, if that animal fell to its left, even it is starving to death has been more than once used in puRanAnURu, aganAnURu and nAlaDiyAr to quote that as an epitome of honour.

In another poem of nAlaDiyAr, an example of lion is given to highlight the same; people that are hard-working like a lion that can kill a mighty elephant, even if they stay at home without income and are starving, will not indulge in deeds that bring down their honour, says that poem.

“Even if there is glory that is important
 To diminish the honour, never be errant”


இன்றெனது குறள்:

இல்லாமல் ஏற்றமில்லை என்றாலும் மானமது
செல்லாமல் செய்க வினை

illAmal ERRamillai enRAlum mAnamadu
sellAmal seiga vinai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...