13th
Dec 2014
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
(குறள் 962:
மானம் அதிகாரம்)
சீரினும் - புகழ் தருவனவற்றைச் செய்வதிலும்
சீரல்ல செய்யாரே - இகழ் தரும் செயல்களைச் செய்யாதவரே
சீரொடு - புகழொடு
பேராண்மை - மானம் (எனும் இரண்டையும்)
வேண்டுபவர் - வேண்டுகின்றவர்
மானக்கேட்டுக்கு அஞ்சி
வாழ்பவர்கள், புகழ்தருகின்ற செயல்களைச் செய்வதிலும், இருக்கும் குடிப்பெருமையைக் கட்டிக்காக்கும்,
இகழ்வனவற்றைச் செய்யாமலிருப்பதயே விரும்புவர். அதுவே அவர்களுக்குப் புகழுமாகும்.
Transliteration:
sIrinum
sIralla seyyArE sIroDu
pERANmai
vENDu bavar
sIrinum –
more than that which gives glory
sIralla
seyyArE – persons that do not indulge in those that tarnish
the glory
sIroDu –
(are the ones that) along with glory
pERANmai –
honour also
vENDubavar –
desiring
Those that fear disgrace of losing honor, more than
doing that which gives glorly, to keep the honor of lineage, will not do that
which brings disgrace; they would construe onluy that as true glory.
“More
than glory, not doing that which brings blame
is what the nobility would desire for honor
and fame”
இன்றெனது
குறள்(கள்):
புகழின் புகழல்ல போற்றாரே மானம்
புகழிரண்டும் வேண்டு பவர்
pugazhin pugazhalla pORRArE mAnam
pugazhiraNDum vENDU bavar
இசையின் வசைதரு ஈட்டாரே மானம்
இசையிரண்டும் வேண்டு பவர்
(இசை - புகழ், சீர்; மானம் - பேராண்மை)
isaiyin vasaitaru ITTArE mAnam
isaiyiraNDum vENDu bavar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam