டிசம்பர் 10, 2014

குறளின் குரல் - 966

11th Dec 2014

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
                                    (
குறள் 960: குடிமை அதிகாரம்)


நலம் வேண்டின் - நன்மை நடக்கவேண்டும் என்று விரும்புகிற ஒவ்வொருவருக்கும்
நாணுடைமை வேண்டும் - பழி பாவங்களுக்கு வெட்குகிற உள்ளம் வேண்டும்
குலம் வேண்டின் - அதே போன்று நற்குலத்தைச் சேர்ந்தவன் என்ற பேர் நிலை பெற
வேண்டுக யார்க்கும் - யாருக்குமே விழைவு வேண்டும்
பணிவு - பணிவெனும் பண்பில்

ஒருவருக்கு புகழ், செல்வம், புண்ணியம் போன்ற நன்மைகள் வேண்டுமாயின் அவருக்கு பழி, பாவங்களுக்கு வெட்குகிற உள்ளமும், அறிவும் வேண்டும். அதேபோல இவன் நற்குலத்தைச் சேர்ந்தவன் என்கிற பேர் நிலை பெற வேண்டுமாயின், தம்மில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று வேற்றுமை பாராட்டாது, பணிவுடன் நடக்கின்ற மனமும், எண்ணமும் வேண்டும்.

இதையேதான், “எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்” என்று ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் வள்ளுவர். நாலடியார் பாடலொன்று, “இருக்கை எழலும், எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோடு இன்ன குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கமாக் கொண்டார்” என்று பணிவுடைமைய குடிப்பிறந்தார்க்கு ஒழுக்கக் கூறாகச் சொல்லுகிறது. மற்றொரு பாடலில், “நல்கூர்ந்த மக்கட்கு அணிகலம் ஆவது அடக்கம்- பணிவில் சீர் மாத்திரையின்றி நடக்குமேல் வாழுமூர் கோத்திரம் கூறப்படும்” என்கிறது நாலடியார்.

Transliteration:

nalamvENDin nANuDamai vENDum kulamvENDin
vENDuga yArkkum paNivu

nalam vENDin -  Those that desire good and grace
nANuDamai vENDum – should fear the shame of blame and sin
kulam vENDin – if desirous of the recognition as noble
vENDuga yArkkum – for everyone, they must desire
paNivu – reverence to others.

A person desirous of good and grace, they must fear the shame of blame and sin; likewise, if a person desires to be recognized as person of noble lineage, must show reverence to everyone, not be disdainful, says this verse.

Earlier in a differenrent chapter of “showing reverence”, vaLLuvar had made a sweeping statement that “everyone must show reverence”; as seen earlier, nAlADiyAr, another popular work on ethics also says people of good lineage would exhibit reverence by getting up and even going ahead to receive people.

“for goodness, grace be fearful of shame of blame and sin;
 for recognition as noble lineage, reverence must be shown

இன்றெனது குறள்:

நாணுடமை நண்ணுக நன்மைவேண்டின் நற்குலம்
வேணுவோர்க்கு வேண்டும் பணிவு

nANuDamai naNNuga nanmaivENDin naRkulam
vENuvOrkku vENDum paNivu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...