டிசம்பர் 09, 2014

குறளின் குரல் - 965

10th Dec 2014

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
                                    (குறள் 959: குடிமை அதிகாரம்)

நிலத்தில் - பூமியில் நடப்பட்ட
கிடந்தமை - விதையின் தன்மையை (நல்லதா அல்லது பயனற்றதா என்பது)
கால்காட்டும் - அது விளைந்து முளையாகும்போதே தெரிந்துவிடும்
காட்டும் - அதேபோல காட்டிவிடும் (ஒருவர் நற்குடிப் பிறப்பாளரா, அல்லரா என்று)
குலத்தில் பிறந்தார் - நற்குடிப் பிறந்தார்
வாய்ச் சொல் - வாயிலிருந்து வரும் சொற்களே.

“கிடந்தமை” என்பதை விதை என்று கொள்ளலாம் அல்லது, விளைந்த பயிராகவும் கொள்ளலாம்.  கொள்ளும் பொருளுக்கேற்ப இரண்டுவிதமாக குறளின் பொருளும் செய்யலாம். விளையும் பயிரின் தன்மையை அதன் முளையானது காட்டுவது போல, ஒருவர் வாயிலே கிளைத்தெழும் சொற்களே அவர் நற்குடிப் பிறப்பினரா, இல்லையா என்பதைக் காட்டிவிடும்.  மற்றொரு விதமாகச் சொல்வதென்றால், முளைக்கும் நிலத்தின் பயிர் விளைக்கும் தன்மையை, அதில் விளைகின்ற பயிரின் செழிப்பே அது நன்னிலமா அன்றி புன்னிலமா என்று காட்டிவிடும். அதேபோல், ஒருவரின் வாயிலிருந்து கிளத்தெழுகின்ற சொற்களே, இவர் நற்குடிப் பிறப்பாளர் அல்லது, அல்லர் என்பதைத் தெளிவாக்கிவிடும்.

Transliteration:

Nilaththil kiDandamai kAlkATTum kATTum
Kulaththil piRandArvAich chol

Nilaththil – what has been seeded in earth
kiDandamai – the seeds’ quality
kAlkATTum – is known when it sprouts and takes firm root
kATTum – likewise, will show
Kulaththil piRandAr – a person’s nobility is revealed by
vAich chol – the words spoken out of their words.

The word “kiDandamai” can either mean “seed” or “that which sprouted from the seed”. Based on how we interpret, the verse can mean differently.  A sprout will definitely show the quality of seed; like wise, words out of a persons’ mouth will reveal his nobility or lack of it. Another way of saying it would be: A lands’ quality is shown in the spouts out of that land; likewise if a person is of noble birth or not shall show in the words out of their mouth, says this verse.

Either interpretation focuses on the spoken words being the indicator of a persons’ nobility.

Quality of land is revealed by its sprouts and yield
So is the noble birth, by a person words that unfold

இன்றெனது குறள் (கள்):

விளையும் பயிரை முளைகாட்டு மாம்போல்
கிளைக்கும்சொல் காட்டும் குலம்

viLaiyum payirai muLaikkATTu mAmpol
kiLaikkumsol kATTum kulam

விளையும் பயிர்நிலத்தின் தன்மைக்கேற் றார்போல்
கிளைக்கும்சொல் காட்டும் குலம்

viLaiyum payirnilaththin thanmaikkER RarpOl

kiLaikkumsol kATTum kulam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...