9th
Dec 2014
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
(குறள் 958:
குடிமை அதிகாரம்)
நலத்தின் கண் - எல்லோரும் அறிந்த நற்குடியிலேதான்
ஒருவன் பிறந்தான் ஆயினும்
நார் இன்மை தோன்றின் - அவனிடத்தில் அன்பு என்னும் ஈரத்தன்மை இல்லாமல்
தோன்றினால்
அவனைக் - அத்தகையவனை
குலத்தின்கண் - அவன் அந்த குடியிலேதாகன் பிறந்தானோ, என்று
ஐயப்படும் - ஐயப்பட நேரிடும்.
சிலர் நற்குடிப் பிறப்பினராயிருப்பர். அவர்களுடைய மூதாதையர்கள்
எல்லோரும் ஆன்றகன்ற சான்றோராக இருந்திருப்பர். ஆயினும் இவர்களிடம் அக்குல முற்பிறந்தோரின்
அன்பு, கருணை, ஈரம் என்பன சற்றும் இல்லாமலிருக்கும். அத்தகையோரைக் காணுறும் போது, இவர்
இத்தகைய குலத்திலா பிறந்தார் என்ற ஐயம் தோன்றுவது இயற்கை. இக்கருத்தையே இன்றைய குறள்
வரைகிறது.
தாமற்பல்
கண்ணனார் என்னும் புலவர், சோழன் மாவளத்தானோடு சூதாடிய பொழுது தாமற்பல் கண்ணனார் சூதாட்டத்தில்
வட்டை மறைத்துவைத்துத் தன்னை ஏமாற்றியதாக எண்ணிய சோழன் சினமுற்று, அவ்வட்டை அவர் மீது
எறிந்தான். அதனால், கோபமுற்ற தாமற்பல் கண்ணனார், மாவளத்தானைப் பார்த்து மன்னா உன் செய்கையைப்
பார்த்தால், நீ சோழ மன்னனுக்குப் பிறந்தவனாக எனக்குத் தோன்றவில்லையே, ஆத்திமாலை சூடிய
உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்களே என்று
இகழ்கிறார். முதற்பகுதி இக்குறளின் கருத்துக்கு இயைந்து இருப்பினும், பின்னால் அவன்
நாணியதையும், அதையே பாராட்டி அப்புலவரே பாடுவதாகவும் அமைந்த புறநானூற்றுப் பாடல் இதோ.
கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர்
எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு?’ என வெறுப்பக்
கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
நற்குடிப்பிறந்தோர்க்கு
ஈரம் என்பது குலத்தைச் சார்ந்த பண்பு என்பதைக் கூறும் முதுமொழிகாஞ்சி வரி: “ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் பேரில் பிறந்தமை
ஈரத்தின் அறிப” (முதுமொழிகாஞ்சி)
Transliteration:
NalaththinkaN nArinmai thOnRin avanaik
kulaththinkaN aiyappaDum
NalaththinkaN – Even born in the noble lineage
nAr inmai thOnRin – if a person does not have the
compassio
avanaik – he
kulaththinkaN – if he was indeed of such noble
lineage
aiyappaDum – shall be doubted.
Some people would be from good lineage; despite
their ancestors were of good stead in erudition and virtues, these persons
shall be of no trace of such good vritues and compassion. It is but natural to
wonder if these persons are indeed from such a noble lineage. This verse is
about such compassionless persons.
thAmaRpal kaNNanAr, a sangam poet, a Brahmin, was
engaged in the game of dice with a CholA prince, “mAvaLaththA nangkiLLi” . At
one point, the prince thought that the poet was playing foul game and threw his
dice in anger. Saddened by this, the poet said, “You don’t seem to be a
descendant of the great lineage of illustrious ChOLa kings. They would never
act so disgracefully of learned Brahmins”. Subsequently when the prince felt
shameful of his act, the poet continued and sang is praise saying that for his
(poet’s) mistake he (The prince) felt shameful.
“It
is doubtful indeed, though a man is of a noble lineage,
if he does not have compassion befitting
vintage image”
இன்றெனது குறள்:
குடிப்பிறந்தும் அன்பிலாதான் ஆயினொரு வன்நற்
குடியின்றோ என்றையு றும்
kuDipiRandum
anbilAdAn Ayinoru vannaR
kuDiyindRO enRaiyu Rum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam