23rd
Nov 2014
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
(குறள் 942:
மருந்து அதிகாரம்)
மருந்தென வேண்டாவாம் - மருந்தென்று ஒன்றும் ஒருவருக்கு வேண்டாவாம்
யாக்கைக்கு - உடம்புக்கு
அருந்தியது - அவர் முன்பு உண்ட உணவு
அற்றது போற்றி - செரித்தமையின் தன்மையை அறிந்து
உணின் - அதற்கேற்றார்போல் அவர் உண்டால்.
ஒருவர் முன்பு
உண்ட உணவு எவ்வாறு செரித்தது என்பதன் தன்மையை அறிந்து, அதற்கேற்றார் போல் தம் உணவை
மீண்டும் உண்பவராயிருப்பின் அவர் உடம்புக்கு மருந்து என்கிற தேவையே இராது. தாம் உண்ணும்
உணவு தன்னுடம்போடு எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதை அறிவதே நோய்வராமல் காப்பது.
உண்ணுவதற்கு முன்பு முன்பு உணவு செரித்திருக்க வேண்டும். அவ்வாறு உண்பவர்க்கே நோய்கள்
அண்டாது. மருந்தும் தேவையிராது.
Transliteration:
Marundena vENDAvAm
yAkkaikku arundiyadu
aRRadu pORRi uNin
Marundena vENDAvAm – no
medicine is needed
yAkkaikku – for the
body
arundiyadu – what a
person ate previously
aRRadu pORRi – is known
to have been digested, and accordingly
uNin – eat.
If a person consumes every meal, after understanding
what he ate earlier has been digested, then the person needs no medicine, says
vaLLuvar. Knowing how agreeable something that was eaten earlier is the best
way to prevent diseases. Before every
meal, food eaten earlier must be digested. For people of such regimen, they
don’t need any medicine.
“If
every meal is eaten, after the previously eaten meal is digested,
No medicine is required for the body as it is disease
protected”
இன்றெனது குறள்:
உண்ட உணவு செரித்தபின் உண்போர்க்கு
திண்ணமாய் வேண்டாம் மருந்து
uNDa uNavu seriththapin
uNbOrkku
thiNNamAi vENDAm marundu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam