நவம்பர் 22, 2014

குறளின் குரல் - 947

95: (Medicine -மருந்து )

[This chapter has been placed under the section of friendship, perhaps for lack of any other meaningful section to place. A body suffers many ailments due to the inherited diseases, perhaps as a result of sins of previous births, or habits of present birth. In either case, to cure self from any ailments, one would need appropriate medicine. By insisting through differen verses the medicine to take care of body from ailments, perhaps vaLLuvar is hinting the ailments due to ill thoughts and make one thing, by taking appropriate medicine for them, one would live well. A healthy body Is a precursor to a healthy mind too]

22nd Nov 2014

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
                                    (குறள் 941: மருந்து அதிகாரம்)

மிகினும் - கூடினாலும்
குறையினும் - குறைந்தாலும்
நோய் செய்யும் - நோவைத் தரும் நோயே செய்யும்
நூலோர் - கற்றறிந்த நூலறிவினர்
வளி முதலா - வாதமாகிய வாயு முதலாகிய
எண்ணிய -  சமன் நிலையில் இருக்கவேண்டியவையாக சொல்லிய
மூன்று - மூன்று மூலக்கூறுகளாம் வாதம், பித்தம், கபம் போன்றவை

இந்திய மருத்துவ நூலாய்ந்தோர், ஆயுர் வேதமாயினும், சித்த வைத்தியமாயினும், வாதம், பித்தம் மற்றும் சிலேட்டுமம் என்று அறியப்படும் கபம் இவற்றின் சமன் நிலைமை குறைப்பாட்டை நோய் மூலங்களாக கூறுகின்றனர். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று சற்று கூடினாலும், குறைந்தாலும் நோவினைத் தருகின்ற நோயையே தந்துவிடும். மருத்துவத்தில், நோயைத் தடுப்பதே முதல் மருந்து. அதற்கு ஒருவர் உடம்பில் இருக்கும் இம்மூன்று மூலக்கூறுகளும் ஒரு நுண்ணிய சம நிலையில் இருக்கவேண்டும்.  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா? நோயைத் தடுப்பதற்கான அறிவே முதல் மருந்து. அதையே வள்ளுவரும் உணர்த்துகிறார்.

Transliteration:

Miginum kuRaiyinum nOiseyyum nUlOr
vaLimudalA eNNiya mUnRu

Miginum – if more
kuRaiyinum – or less
nOi seyyum – it will bring disease
nUlOr – says the learned that know about diseases and the cures
vaLi mudalA – that which begins with vAtA dosha (space and air); the other two are pitta dosha (fire and water)  and Kapha dosha (water and earth)
eNNiya – counted as the primary root causes when out of equilibrium
mUnRu – the three in count.

Whether it is AyurvEdA or Siddha vaidhyA, Indian ancient medical practices point to the doshAs such as vAtA, pittA, and kaphA being in proper balance or equilibrium to keep a body out of disease. vAtA is combination of space and air; pittA is that of fire and water; and kaphA is that of water and earth. Even if one of them either increases or decreases slightly, then it causes disease in the body; In the practice of medicine, prevention is better than cure and is a better cure. To prevent diseases, one must have the knowledge about what might cause disease.  vaLLuvar does exactly the same with a caution that these elements must be in perfect balance that serve as a medicine.

“Even the slightest increase or decrease of the three elements of body
 beginning air, say the erudite well versed, shall bring disease speedy”

இன்றெனது குறள்:

வாதகப பித்தமென மூன்றும் குறையகூட
நோதரும்நோய் என்பர்நூ லோர்

vAdakaba piththamena mUnRum kuRaiyakUDa

nOtarumnOi enbarnU lOr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...