நவம்பர் 21, 2014

குறளின் குரல் - 946

21st Nov 2014

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
                                    (குறள் 940: சூது அதிகாரம்)

இழத்தொறூஉம் - ஒருவன் தன் செல்வத்தை வைத்திழக்க இழக்க
காதலிக்கும் - மென்மேலும் விரும்பி ஆடுவான் 
சூதேபோல் - சூதாட்டத்தை (சூதாட்டத்துக்குத் தன்னை இழந்தவர்கள் செய்வது)
துன்பம் - உடம்பால் பல துன்பங்களை
உழத்தொறூஉம் - மீண்டும் மீண்டும் அனுபவிப்பினும்
காதற்று - உடம்பை காதலிப்பை விடாது
உயிர் - உயிர்

இக்குறள் சூதாடிகளும் சூதாட்டத்தின் மேலுள்ள பற்றைக் உவமையாகக் கூறி, உயிருக்கு உடம்பின்மேல் உள்ள பற்றைக் கூறுவதுபோல் உள்ளது. சூதாட்டத்தை முன்னிருத்தி யாக்கை நிலையாமை உணர்ந்தும் உயிரினது இயல்பு யாதென்று கூறுவது போலுள்ளது. உயிரினது இயல்பைக் கூறுவதற்காக எழுதப்பட்டதா? அன்றி சூதாட்டத்தின் கொடுமையை கூறுவதற்காக எழுதப்பட்டதா என்ற ஐயம் ஏற்படுகிறது.

செல்வத்தை வைத்து இழக்க இழக்க, சூதாட்டத்தைக் கைவிடுவோம் என்ற எண்ணம் தோன்றாது, மேலும் அதால் ஈர்க்கப்பட்டு எல்லாமிழக்கத் துணியும் சூதாடிகளைப் போன்றதாம் உயிர். இவ்வுடம்பின் காரணமாக பல துன்பங்களை அடைந்தும், மேலும் உறுவோம் என்றவுண்மை அறிந்தும் புரிந்தும், உடலை விடுவதற்கு இவ்வுயிர் துணியாது உடம்பென்னும் சட்டையை உதறாது பிடித்துவைத்துக்கொள்ளும். இதை அறிந்தும் அறியாமையில் உழலும் உயிரினது இயல்பாகக் கூறுகிறார் வள்ளுவர்.

சூதாட்டத்தின் அழிக்கும் தன்மையை கூறுவதை, ஒருவர் உடம்பால் கொள்ளும் அவத்தைகளைக் காட்டி, அவர் உணர்ந்துகொள்ள மாட்டாரா என்று வள்ளுவர் நினைத்தார் போலும்.

Transliteration:

IzhaththoRUum kAdalikkum sUdEpOl tunbam
uzhatthoRUum kAdaRRu uyir

IzhaththoRUum – The more a gambler loses his wealth
kAdalikkum – the more he loves
sUdEpOl – the gambling; likewise
tunbam - misery
uzhatthoRUum – if the body is subject to perpetual (misery) again and again
kAdaRRu – does not abdicate the love for the body
uyir – the soul.

The metaphorical usage of this verse makes one wonder, if this verse belongs to this chapter or a different chapter on souls’ nature. The verse uses gamblers’ love for gambling despite being in the losing streak always, which is like how the soul clings to the body, despite the many suffering the body goes through.

Though the soul understands that the body is not permanent and it goes through many miserable pains, it does not relinquish its affinity to the body. Likewise the habitual gamblers shall never relinquish the allure to gamble, though they continue to lose their wealth more and more.

Underling the strong destroying influence of gambling, vaLLuvar ends the chapter with a cautionary note to give a vivid mental picture of miseries of the body in the minds of gamblers.

“Souls’ affinity to the body is blind despite many miserable pains inflicted -
 Likewise is gamblers’ allure to gambling despite losing all to be depleted”

இன்றெனது குறள்:

பெருகுதுன்பம் பற்றுயிர் மேல்தரும்போல் செல்வம்

அருகபற்றாம் சூதாட்டம் மேல்

perugutunbam paRRuyir mEltarumpOl selvam
arugapaRRAm sUdATTam mEl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...