நவம்பர் 20, 2014

குறளின் குரல் - 945

20th Nov 2014

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
                                    (குறள் 939: சூது அதிகாரம்)

உடை - உடுக்க உடை
செல்வம் - வளங்களைத் தரும் செல்வம்
ஊண் - உண்ணும் உணவு
ஒளி - புகழ்
கல்வி - படிப்பறிவு
என்று ஐந்தும்  - என்ற ஐந்து தேவைகளும்
அடையாவாம் - அடையமுடியாததாகிவிடும்
ஆயங் கொளின் - கவறாட்டத்தில் விருப்பம் கொண்டால்

கவறாட்டத்தில் விருப்பம் கொண்டவர்க்கு, உடுக்க உடை, வளங்களைத் தரும் செல்வம், உண்ணும் உணவு, புகழ், படிப்பறிவு என்ற ஐந்து தேவைகளும் அடையமுடியாததாகிவிடும் என்கிறது இக்குறள்.  இதையே அறநெறி சாரப் பாடலொன்று இக்குறளின் கருத்தையொட்டியது.

“ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
 மேதை எனப்படும் மேன்மையும் - சூது
 பொருமென்னும் சொல்லினால் புல்லப் படுமேல்
 இருளாம் ஒருங்கே இவை”  (147)
Transliteration:

uDaiselvam UNoLi kalvienRu aindum
aDaiyAvAm Ayang koLin

uDai – dress to wear
selvam - wealth
UN – the food
oLi – the fame
kalvi – the education
enRu aindum – these essential five
aDaiyAvAm – one shall not attain
Ayang koLin – if indulgent in gamble of dice

Those who are indulgent in gambling, shall not even attain the essential five needs, dress to cover self, wealth for comfort, food, fame, and  education, says this verse. It is very obvious that vaLLuvar uses a tactic of lising the essentials for every humany beings and induces the fear of not getting them, if a person indulges in gambling.

“Food, dress, wealth, education and fame, the five,        
 Shall not be with persons that only for gamble live”

இன்றெனது குறள்:

உணவு உடைபுகழ் கல்விசெல்வம் ஐந்தும்
புணரார் கவறாடு வோர்

uNavu uDaipugazh kalviselvam aindum

puNarAr kavaRADu vOr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...