நவம்பர் 19, 2014

குறளின் குரல் - 944

19th Nov 2014

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
                                    (குறள் 938: சூது அதிகாரம்)

பொருள் கெடுத்துப் - செல்வத்தைக் கெடுத்து
பொய் மேற்கொளீஇ - பொய்யும் சொல்லச் செய்யும்
அருள் கெடுத்து - பெரியோர் தருகின்ற நல்லருளையும் போக்கிச் செய்யும்
அல்லல் - துன்பத்திலே
உழப்பிக்கும் - ஆழ்த்தி வருத்தும்
சூது - சூதாட்டம்.

சூதாட்டம் செல்வத்தை அழிக்கும்; பெரியோர்கள் நல்கும் அருளையும் அழிக்கும். ஒருவரை பொய் சொல்லத் தூண்டும்; அவரை எப்போதும் துன்பத்திலேயே ஆழ்த்திவிடும். இக்குறள் சூதாட்டத்தின் ஒட்டுமொத்த தீமைகளையும் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது.

சூதாட்டம் செல்வத்தை அழிக்கும் என்பது எல்லோரும் அறிந்தவொன்றே. சூதாட்டம் என்பது செல்வத்தைத் தொலைப்பதால், மீண்டும் சூதாடுவதற்காக பிறரிடம் பொய் கூறியாவது கடன்வாங்குவர், பிறகு அதற்காகத் திருடவும் செய்வர். இவ்வாறு ஒவ்வொன்றாக, மானத்தையும், ஒழுக்கத்தையும் கெடுப்பதால், ஆன்றோர்களின், சான்றோர்களின், ஆண்டவனின் அருள் கிடைப்பது இல்லாதொழியும்.   பொருளற்றார்க்கு இவ்வுலகில்லை, அருளற்றார்க்கு அவ்வுலகில்லை என்ற சொல்வழக்கு உண்டு.

Transliteration:

poruLkeDuthtu poimER koLIi aruLkeDuthtu
allal uzhappikkum sUdu

poruL keDuthtu – will destroy wealth
poimER koLIi – and also make him lie
aruL keDuthtu – also will deter all the grace
allal – misery
uzhappikkum – will set the person in that (misery!)
sUdu – the gambling.

Gambling will ruin the wealth, make a person lie for everything, and will also ruin the grace and blessing from the elders of greatness; not only that, will also set the person in perpetual misery to suffer, sums up the ills of the evil that gambing is.

It is known that gamble destroys a persons’ wealth; because of that it makes the habitual gambler to lie to others, to somehow get more money to continue gambling; later it may induce them to indulge in thefts too. One by one, the habit shall drive a person to lose, good conduct, virtues and honor; thus it denies the grace of learned, elderly and eventually the Godhead too. As much as this world is not for wealthless, the heavens are not for those that fall from the grace of Godhead.

“Destroys the wealth, deter all the grace, and forces in falsewood,
 the evil that gamble is, leaves a person in utter misery, devastated”

இன்றெனது குறள்:

செல்வமும் நல்லருளும் போக்கிப்பொய் சொல்லவைத்து
தொல்லையில் ஆழ்த்துவதாம் சூது

selvamum nallaruLum pOkkippoi sollavaiththu

thollaiyil AzhthuvadAm sUdu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...