18th
Nov 2014
பழகிய
செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக்
காலை புகின்.
(குறள் 937:
சூது அதிகாரம்)
பழகிய
செல்வமும் - பண்டுதொட்டு வந்த பரம்பரைச் செல்வத்தையும்
பண்பும் -
நற்குணங்களையும்
கெடுக்கும் -
நீக்கியொழிக்கும்
கழகத்துக் -
சூது களத்துக்குள்
காலை
புகின் - சென்று காலத்தை கழிப்பவர்க்கு.
ஒருவர் ஒவ்வொரு நாளும் சூதாடும் இடத்திலேயே காலத்தை கழித்தால், அவர் தம்முடைய
பண்டு தொட்டு வந்த அவருடை பரம்பரைச் செல்வங்களையும், நற்குணங்களையும் தொலைப்பர். பண்டு
தொட்டுவந்த செல்வங்களாக, அவரது பரம்பரை கௌரவம், மற்று அறம் சார்ந்த நற்பெயரும் புகழுமாம்.
Transliteration:
Pazhagiya selvamum paNbum keDukkum
Kazhagaththu kAlai pugin
Pazhagiya selvamum – the wealth inherited from ages
(including the honor and fame)
paNbum – and the good traits, virtues
keDukkum – will ruin
Kazhagaththu – in the gamble-house
kAlai pugin – if a person spends all his time, day
in and day out.
An indulgent
gambler that spends all the time, day in and day out in the gamble-house, shall lose all his
inherited wealth of honor, fame, happiness, including the physical wealth of
prosperity along with good virtues and traits, says this verse. It is so true that perpetual gamblers shall
lose everything they have, the precious among them being honor and fame that
have been carefully passed on through generations.
“All
the inherited wealth and good virtues of yore, one can lose
If every living day is spent in the shambles
of a gamble house”
இன்றெனது குறள்:
பண்டுவந்த
செல்வமும் நற்குணமும் சூதுகளம்
கண்டுகாலம்
போக்கநீங் கும்
paNDuvanda
selvamum naRguNamum chUdukaLam
kaNdukAlam
pOkkanIng gum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam