4th
Nov 2014
ஈன்றாள்
முகத்தேயும் இன்னாதால்
என்மற்றுச்
சான்றோர்
முகத்துக் களி.
(குறள்
923:
கள்ளுண்ணாமை
அதிகாரம்)
ஈன்றாள்
-
குற்றங்களை
மறந்து மன்னிக்கும் தாயின்
முகத்தேயும்
-
முகத்துக்கே
இன்னாதால்
- காணப்
பொறாதத் துன்பம் தருவதாகிய
(எது?
கள்ளுண்ணல்)
என்மற்றுச்
- எப்படி
மற்று அவ்வாறு இல்லாது
குற்றங்களைக் கடியும்
சான்றோர்
-
கற்றறிந்த
சான்றோர்
முகத்துக்
-
முன்பாக,
அவர்கள்
முகத்துக்கெதிரே
களி.
- கள்ளுண்டு
களிப்பது சரியென்று கொள்ளப்படும்?
தாயென்பவள்
எல்லா குற்றங்களையும் மறந்து
மன்னிக்கக்கூடியவள்.
அவளுக்கே
தம்மகன் கள்ளுண்டு கிடப்பது
துன்பமும்,
காணப்
பொறாததும் ஆகும்.
கற்றறிந்த
சான்றோர்,
குற்றங்களைப்
பொறாத இயல்பினர்.
சமூகம்
குற்றமில்லாது இருக்கவேண்டும்
என்று விரும்புகிறவர்கள்.
அவர்கள்
எவ்வாறு கள்ளுண்ணுபவர்களைப்
பொறுத்துக்கொள்வார்கள்?
என்று
வினவுகிறார் வள்ளுவர்.
Transliteration:
InRAL
mugaththEyum innAdAl enmaRRuch
chAnROr
mugaththuk kaLi
InRAL
– A mother who is generally
forgiving
mugaththEyum
– in front of her face
innAdAl
– the pain of son drinking toddy is unbearable to her
enmaRRuch
– how then, for usually unforgiving to maintain social order and
justice
chAnROr
– learned scholars
mugaththuk
– before their face
kaLi
– drinking toddy would be bearable?
A
mother is usually a forgiving soul. Even she cannot bear and be
painful, if she sees her son drinking toddy. How then learned
scholars, that are usually unforgiving to keep the societal orders
tolerate people drinking toddy before them?, asks vaLLuvar.
“Even
an ever forgiving mother wouldn't tolerate a toddy drinking son!
How else,
unforgiving learned scholars, would just take it as some fun?”
இன்றெனது
குறள்:
பெற்றாளே
கள்ளுண்ணக் காணப் பொறாளாயின்
கற்றறிந்தோர்
என்பொறுக்கும் அஃது?
PeRRALE
kaLLUNNak kANAp poRALAyin
kaRRaRindOr
enpoRukkum ahdu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam