93:
( Not drinking toddy - கள்ளுண்ணாமை
)
[In
the last verse of previous chapter “wanton woman”, vaLLuvar had
enlisted toddy and gambling as two other vices along with being in
the company of harlots as the main cause of losing all wealth. This
chapter and the next are about the evil of toddy consumption and
gambling respectively. Toddy or any other intoxicant is mind-numbing
and is certain to make anyone's brain function to be affected to act
irrationally, which in turn results in loss of everything good. In
this chapter, vaLLuvar lists all such ill-effects of toddy drinking]
2nd
Nov 2014
உட்கப்
படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல்
கொண்டொழுகு வார்.
(குறள்
921:
கள்ளுண்ணாமை
அதிகாரம்)
உட்கப்
படாஅர் -
பகைவரால்
அஞ்சப்படார்,
மதிக்கப்படார்
ஒளியிழப்பர்
-
தமக்கு
உரியதாம் புகழையும் இழப்பர்
எஞ்ஞான்றும்
-
எப்போதும்
கட்காதல்
-
போதையில்
ஆழ்த்தி அறிவை குலைக்கும்
கள்ளின் மேல் ஆசை
கொண்டொழுகுவார்
-
கொண்டு
அதை அருந்துவதிலேயே மனத்தைச்
செலுத்தியவர்.
கள்ளருந்துதல்
உடலுக்குமட்டுமன்றி ஒருவர்
அறிவைச் சிதைக்கும் தன்மையது.
அதனாலேயே
அவர்கள் பகைவர்களால்
மதிக்கப்படுவதுமில்லை,
அஞ்சப்படுவதுமில்லை.
அவருக்குண்டாயிருந்த
புகழும்,
அறிவுச்
செறிவும் இல்லாது அழியும்
என்று கள்ளருந்துதலின்
தீமையைப் பொதுவாகக் கூறும்
குறள் இது.
இவ்வாறு
குடியைக்
கெடுக்கும் குடியைப் பற்றி,
அறநெறிச்
சாரப்பாடல் சொல்லி,
அதை
விட்டொழிக்க வலியுறுத்துகிறது.
ஒளியும்
ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையார்
என்று உரைக்கும் தேசும் -
களியென்னும்
கட்டுரையால்
கோதப்படுமேல் இவையெல்லாம்,
விட்டொழியும்
வேறாய் விரைந்து.
Transliteration:
uTkap
pADAar oLiyizhappar enjAnRum
kaTkAdal
koNDOzhugu vAr
uTkap
pADAar – Not feared by enemies or respected
oLiyizhappar
– will lose even the repute and radiance they have
enjAnRum
- always
kaTkAdal
– those who have love for toddy
koNDOzhuguvAr
– and live their life consuming it''
Being
obsessed with toddy is not only injurious to health, but will destroy
thinking of anyone; and they will not be respected or feared by their
enemies. Apart from that, they will lose their radiance of glory;
Thus saying the ill-effects of toddy, vaLLuvar begins this chapter.
Lustful
of toddy shall lose respect, fear of all
always;
the brilliance, too shall fade and fall
இன்றெனது
குறள்:
கள்ளாசைக்
கொண்டார்க்கு அஞ்சார்
பகைவரென்றும்
ஒள்ளிமையும்
நீங்கிடு வர்.
KaLLAsaik
koNDArkku anjAr pagaivarenRum
oLLImaiyum
nIngiDu var
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam